ஒரே ஒரு அறிவிப்பில் மோடியை அலறவிட்ட ராகுல்காந்தி...!

By vinoth kumarFirst Published Mar 13, 2019, 3:40 PM IST
Highlights

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மேலும் பிரதமர் யார் என்பதை, தேர்தலில் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மேலும் பிரதமர் யார் என்பதை, தேர்தலில் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார். 

மக்களவை தேர்தலை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தடைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் சமூக நல்லிணக்கமே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 

எனது தந்தை கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் மீது தனிப்பட்ட கோபம் எதுவும் எனக்கு இல்லை. 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். 

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசாரை விடுவித்தது பா.ஜ.க. அரசு தான். துணை ராணுவ வீரர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என குற்றம்சாட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டோம். 

ரபேல் விவகாரத்தில் உண்மைகளை வெளிக்கொணர்ந்த இந்து பத்திரிகையை பாராட்டுகிறேன். நான் ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். பிரதமர் மோடி சந்திக்கிறாரா? என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். எங்களுடைய நோக்கம் பா.ஜ.க.வை வீழ்த்துவது தான். பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இலங்கையில் நடந்த படுகொலையில், காங்கிரசுக்கு தொடர்பு உள்ளதாக யாரும் கருதவில்லை.

நீட் தேர்வால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. நீட் விவகாரத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே பொறுத்தமானதாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு நாடாளுமன்றம் பேரவைகளில் 33% ஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

click me!