தேர்தல் ஆணையமாவது... ஆணவமாவது...? எங்களுக்கு குக்கர் சின்னம்தான்.. அடித்து கூறும் டிடிவி.தினகரன்..!

By vinoth kumarFirst Published Mar 25, 2019, 3:20 PM IST
Highlights

அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். நாளை காலை குக்கர் சின்னம் கோரிய வழக்கின் தீர்ப்புக்கு பின், அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். நாளை காலை குக்கர் சின்னம் கோரிய வழக்கின் தீர்ப்புக்கு பின், அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

அமமுகவுக்கு இனி நடக்கவுள்ள தேர்தல்களில் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்குமாறு தினகரன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் முடிவடைவதால் குக்கர் சின்னம் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி உத்தரவு வழங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பில் தினகரன் அணியினர் இருந்து வந்தனர். ஆனால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

அமமுகவுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்குவதில் என்ன பிரச்சனை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அமமுக கட்சி பதிவு செய்யப்படாததால் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது. உரிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நாளை காலை 10.30 மணி வழக்கினை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன்;- குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் என்றார். நாளை காலை குக்கர் சின்னம் கோரிய வழக்கின் தீர்ப்புக்கு பின், அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறினார். அமமுகவை திட்டமிட்டே தேர்தல் ஆணையம் வஞ்சிக்கிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் இல்லை என்பதை உச்சநீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது.

 

அதிமுகவை உரிமை கோரி வழக்கு நடைபெற்று வந்ததால்தான் கட்சியை பதிவு செய்யவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். தேர்தல் ஆணையம் எங்களுக்கு பொதுவான சின்னம் ஒதுக்காது என்பது எங்களுக்கு தெரியும். நிச்சயம் எங்களுக்கு நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மீண்டும் குக்கர் சின்னம் கண்டிப்பாக கிடைக்கும் என டிடிவி.தினகரன் அடித்து கூறியுள்ளார். 

click me!