"எம்.பி. ஆனதும் முதலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை தான் சந்திக்க விரும்பினேன்" - இல. கணேசன் உருக்கம்

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 01:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
"எம்.பி. ஆனதும் முதலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை தான் சந்திக்க விரும்பினேன்" - இல. கணேசன் உருக்கம்

சுருக்கம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன், மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் எம்.பி. ஆனதும் மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும் என்று நினைத்தவர்களில் முதலமைச்சர் ஜெயலலிதா முதல் நபர் ஆவார் என்று கூறினார்.

அப்போது பேசிய அவர், உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பார்க்க வந்தது வரவேற்கத்தக்கது வரவேற்கத்தக்கது என்றார்.

நான் எம்.பி. ஆனதும் மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும் என்று நினைத்தவர்களில் முதலமைச்சர் ஜெயலலிதா முதல் நபர் ஆவார் என்று கூறினார். மேலும், பேசிய இல.கணேசன், முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று மீண்டும் பணிகளைத் தொடங்குவார் என கூறினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிரதமர் மோடி, வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு தெரியாது. வரமாட்டார் என சொல்லவும் முடியாது என்று எம்.பி. இல. கணேசன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்
TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!