பொய் வீடியோவால் கேவலப்படுத்திட்டீங்களே...! டிடிவிக்கும் வெற்றிவேலுக்கும் செருப்பு மாலை அணிவித்து குமுறலை தீர்த்த அம்மா விசுவாசிகள்...! 

 
Published : Dec 20, 2017, 06:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
பொய் வீடியோவால் கேவலப்படுத்திட்டீங்களே...! டிடிவிக்கும் வெற்றிவேலுக்கும் செருப்பு மாலை அணிவித்து குமுறலை தீர்த்த அம்மா விசுவாசிகள்...! 

சுருக்கம்

After one year of DTV supporter Successful release of the video taken during the J treatment has created a huge controversy.

ஜெ சிகிச்சையின்போது எடுத்த வீடியோ என டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் ஓராண்டிற்கு பிறகு வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொய் வீடியோ வெளியிட்டதாக கூறி டிடிவி தினகரன் மற்றும் வெற்றிவேல் புகைப்படம் பதித்த பேனருக்கு மயிலாடுதுறை அதிமுகவினர் செருப்பு மாலை அணிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. 

இதைதொடர்ந்து சென்னை, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஜெயலலிதா, பழச்சாறு அருந்தும் காட்சி பதிவாகியுள்ளது. 

இது போலி வீடியோ என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெ சிகிச்சையின்போது எடுத்த வீடியோ என டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் ஓராண்டிற்கு பிறகு வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொய் வீடியோ வெளியிட்டதாக கூறி டிடிவி தினகரன் மற்றும் வெற்றிவேல் புகைப்படம் பதித்த பேனருக்கு மயிலாடுதுறை அதிமுகவினர் செருப்பு மாலை அணிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!