
வழக்கமாக கைது செய்வதை ‘வாரண்ட்’ மூலம் தெரிந்து கொள்ளலாம்! ஆனால் தினகரன் விவகாரத்தில் ஒரு கப் தேநீர் மூலம் அவரது கைது அறிவிக்கப்பட்டிருப்பதுதான் டெல்லி அரசியலின் கில்லி மூவ்!
இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் எனும் வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசியலரங்கில் இந்த வழ்க்கே ஒரு வித்தியாசமானதாக பார்க்கப்படும் நிலையில், அவரது கைதும் வித்தியாசமானதாகதான் இருக்கிறது. அதாவது 3 நாட்கள் தொடர் விசாரணையில் சோர்ந்து போன தினகரன், தான் கைதாவது உறுதி என்பதை தெரிந்தே இருந்தார்.
ஆனால் எப்போது கைது? என்பதை மட்டும் அவருக்கு சஸ்பென்ஸாக வைத்திருந்தது டெல்லி போலீஸ். இந்நிலையில் நான்காவது நாள் விசாரணைக்கு பின் மாலையில் அவருக்கான தேநீரை அவரது தரப்பினர் வெளியிலிருந்து விசாரணை ஏரியாவுக்குள் அனுப்பியிருந்தனர்.
நான்கு நாட்களாக அந்த மாதிரியான வசதிகள் எதற்கும் தடை சொல்லாத போலீஸ் அந்த தேநீரை தடுத்துவிட்டது. ‘அவர் டீ கேட்டா நாங்களே ஏற்பாடு பண்ணி கொடுப்போம்.’ என்று சொல்லிவிட்டார்கள். அப்போதே தினகரன் தரப்புக்கு பொறிதட்டிவிட்டது.
அதேபோல் இரவு உணவையும் இதே ஸ்டைலில் தடுத்துவிட்டு அவர்களே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்போது தினகரனுக்கு புரிந்துவிட்டது ‘சரி, பிரம்ம முகூர்த்தம் நெருங்குது. இனி அரெஸ்ட்தான்.” என்று அதை எதிர்கொள்ள தயாராகிவிட்டார் என்கிறார்கள் டெல்லியில் அவருக்கு துணையாக இருந்தவர்கள்.
எனிதிங் மே ஹேப்பன் ஓவர் எ கப் ஆஃப் டீ!