நடிகர் சங்க நிதியில் கைவைத்தாரா விஷால்? சண்டகோழியை சகட்டுமேனிக்கு சீண்டும் அ.தி.மு.க.

By vinoth kumarFirst Published Nov 16, 2018, 1:10 PM IST
Highlights


விஜய், ரஜினி, கமல் என்று தமிழ் சினிமா உலகின் முன்னணி மாஸ் ஹீரோக்கள் அத்தனை பேரும் ஆளும் அ.தி.மு.க. அரசை விமர்சன உளி கொண்டு டேமேஜ் செய்து கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே எடப்பாடி டீமிடம் அடிபட்டிருக்கும் விஷாலும் களமிறங்கியிருக்கிறார்.

விஜய், ரஜினி, கமல் என்று தமிழ் சினிமா உலகின் முன்னணி மாஸ் ஹீரோக்கள் அத்தனை பேரும் ஆளும் அ.தி.மு.க. அரசை விமர்சன உளி கொண்டு டேமேஜ் செய்து கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே எடப்பாடி டீமிடம் அடிபட்டிருக்கும் விஷாலும் களமிறங்கியிருக்கிறார். 

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ சேனலாக துவக்கப்பட்டிருக்கும் ‘நியூஸ் ஜெ’ விஷயத்தில் ட்விட்டர் வடிவில் விஷால் மூக்கை நுழைத்திருந்தார். இது பற்றி நமது ஏஸியாநெட் தமிழ் இணையதளம் நேற்றே விரிவான செய்தி வெளியிட்டிருந்தது.  அந்த ட்விட்டில், ‘சேனல் துவங்க பெரும் செலவு ஆகுமென கேள்விப்பட்டிருக்கிறேன். மாத சம்பள எம்.எல்.ஏ., எம்.பி.க்களான நீங்கள் எப்படி இப்படியொரு பிஸ்னஸ் மாடலாக வெளிப்பட முடிகிறது?’ என்று கேட்டிருந்தார். விஷாலின் இந்த சென்சேஷனல் ட்விட்டுக்கு நிச்சயம் அ.தி.மு.க. தரப்பிலிருந்து அதிரடி சரவெடி ரியாக்‌ஷன் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. 

அதை பூர்த்தி செய்திருக்கிறார் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’வின் ஆசிரியரான மருது அழகுராஜ். அவர் விஷாலுக்கு விமர்சன ரீதியில் கொடுத்திருக்கும் பதிலின் ஹைலைட்ஸ் வடிவம் இதோ... 

“எங்களைப் பேசும் விஷாலின் யோக்கியத்தனத்தை நான் விமர்சிக்கவா? அ.தி.மு.க. தலைமை துவங்கியிருக்கும் சேனல் பற்றி கேட்பவர், தான் தலைமை நிர்வாகியாக இருக்கும் நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகளைக் காட்டட்டும் பார்க்கலாம். வரிசையாக ஃபெயிலியர் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் விஷாலுக்குன் இடைத்தேர்தலில் போட்டியிடும் தைரியம் எப்படி வந்தது? செலவுக்கு என்ன செய்வதாக நினைத்திருந்தார்.

வணிகரீதியாக தோல்வியில் கிடக்கும் விஷாலுக்கு தேர்தல் செலவுக்கு பணம் தருவதாக சொன்னது யார்? தினகரன் பணம் கொடுத்தாரா! தினகரன் தந்த பணத்தில்தான் இடைத்தேர்தலில் குதித்து அ.தி.மு.க.வை தொந்தரவு செய்யலாம் என கனவு கண்டாரா? ஒரு வேட்புமனுவை உருப்படியாக தாக்கல் செய்ய தெரியாதவர் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியான அ.தி.மு.க.வின் சம்பாத்தியம் பற்றிப் பேசுகிறார். 

இந்த மாபெரும் இயக்கத்தை உரசிப் பேசினால் தனக்கு மீடியா விளம்பரம் கிடைக்கும்! எனும் நப்பாசையில் விஷால் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். இந்த தேசத்தில் குட்டிக் குட்டி கட்சிகள் கூட தங்களுக்கென சேனல் வைத்துள்ளன, இவ்வளவு ஏன் மத அமைப்புகள் கூட சேனல்கள் வைத்திருக்கின்றன. இந்த சூழலில், மாபெரும் இயக்கமான அ.தி.மு.க. சேட்டிலைட் சேனல் துவக்குவதை பற்றி கேள்விகேட்கிறார் என்றால் விஷாலுக்கு புத்திசாலித்தனம் எந்தளவில் இருக்கிறதென்று பார்க்கணும். 

நான் மீண்டும் கேட்கிறேன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட பணம் ஏது? விஷால் மக்கள் நல இயக்கம் எனும் அமைப்பை துவக்கியிருக்கிறாரே அதை நடத்த பணம் ஏது? அந்தப் பணம் எங்கிருந்து வந்தது தினகரன் கொடுத்ததா அல்லது நடிகர் சங்க நிதியில் கைவைத்துவிட்டாரா! பதில் சொல்லுங்க விஷால்.” என்று வரிக்கு வரி விளாசியிருக்கிறார் விஷாலை. சண்டகோழி என்ன செய்யப்போகிறது?

click me!