
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரின் நடிப்பைப் புரிந்துகொண்டு அதிமுக தொண்டர்கள் விரைவில் தேமுதிகவில் இணைவார்கள் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர வலியுறுத்தி விழுப்புரத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய விஜயகாந்த், அதிமுகவின் சின்னத்தை முடக்கியவர் ஓபிஎஸ்; ஆனால் இப்போது அவரும் பழனிசாமியும் இணைந்துகொண்டு சின்னத்தை மீட்க முயற்சிக்கின்றனர். சிவாஜி, கமலைவிட பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சிறந்த நடிகர்கள் என தெரிவித்தார்.
மேலும் அவர்களின் நடிப்பைப் புரிந்துகொண்டு அதிமுக தொண்டர்கள் விரைவில் தேமுதிகவில் இணைவார்கள் என விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்தார்.