300 பூத்தில் ஒரு ஒட்டு கூட வாங்காத டிடிவி..!! எகத்தாளம் பண்ணும் அதிமுக...

Published : May 27, 2019, 11:26 AM IST
300 பூத்தில் ஒரு ஒட்டு கூட வாங்காத டிடிவி..!! எகத்தாளம் பண்ணும் அதிமுக...

சுருக்கம்

வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. அமமுகவுக்கான செல்வாக்கு போக போகத் தெரியும், 300 வாக்கு சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் பூஜ்யம் எனக் காட்டியுள்ளது. அமமுகவுக்கான எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? என தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அடையாறில் உள்ள வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிகையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். தமிழகத்தில் சுமார் 300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகி உள்ளன. இதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில்கூற வேண்டும். அமமுக முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே, அவர்களின் வாக்குகள் எங்கே போனது..? என்று வினவினார். 

10 பேர் கட்சியை விட்டு செல்வதால், அமமுகவிற்கு எந்த பாதிப்புத் இல்லை. தொரடர்ந்து கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். செந்தில் பாலாஜி திமுக, கட்சிக்கு சென்று வெற்றி பெற்றது அவரது புத்திசாலித்தனமாக இருக்கலாம் என்றார். சென்ற தேர்தலில் 37 தொகுதியில் தோற்ற திமுக., இப்போது 37-ல் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு தேர்தல் மக்களின் மனநிலை மாறும். எனவே பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டிய அவசியம் இல்லை, எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

தினகரனின் இந்த பேட்டியை பார்த்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் 300 பூத்துல ஒரு ஒட்டு கூட வங்கால, இது இவரு ஆட்சியை கலைச்சுடுவேன்னு மிரட்டுறாரு என கலாய்த்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!