உருவானது தீபா பேரவை ;25 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து விட்டார்களாம்!!!!

Asianet News Tamil  
Published : Jan 05, 2017, 09:19 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
உருவானது தீபா பேரவை ;25 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து விட்டார்களாம்!!!!

சுருக்கம்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என நாளுக்குநாள் அதரவு அதிகரித்துள்ளது 

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நாள் முதலே தீபாவிற்கு ஆதரவு குரல்கள் எழும்பின

இரண்டாம் நாள் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய போதே அவருக்கு ஆதரவு கூடிவருவது வெளிச்சத்துக்கு வந்தது 

தனது கணவருடன் சென்னை தியாகராய நகரில் வசித்து வருகிறார் தீபா ,எப்படியோ அவரது வீட்டை கண்டுபிடித்து ஏராளமான தொண்டர்கள் அவரை காண வருகின்றனர் 

இதுஒரு புறம் இருக்க தமிழகம் முழுவதும் தன்னிச்சையாகவே போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைப்பதும் தொடர்ந்து மற்றொரு பக்கம் நடந்து வருகிறது 

இந்த நிலையில் சேலத்தில் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்க பட்டுள்ளது 

ராமசந்திரன் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேரவைக்கு இவர் ஒருங்கினைப்பாளராம்  

தமிழகம் முழுவதும் இவர்கள் சுற்றுபயணம் செய்து மொத்தம் இது வரை 25 லட்சம் உறுப்பினர்களை இணைத்திருக்கிறார்களாம்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்த அமைப்பினர் புதிய கொடி மற்றும்லோகோ வை அறிமுகம் செய்தனர் 

ஏற்கனவே சசிகலா எதிர்ப்பு நிலைபாட்டை கொண்ட நிர்வாகி கோட்டை பாபு உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் 

அதிமுகவின் ஒரு பிரிவினர் தீபா நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும் என வற்புறுத்தி வரும் வேளையில் அதற்கு தீபா சம்மதிப்பாரா? சில நாட்களில் விடை தெரிந்துவிடும் 

PREV
click me!

Recommended Stories

அமெரிக்க - இஸ்ரேல் போருக்கு நடுவே சிக்கிய 36 இந்தியக் கப்பல்கள் - மிரண்டு தவிக்கும் உலக நாடுகள்..!
TVK VIJAY: செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு ஸ்கெட்ச்! வேட்பாளர் தேர்வில் விஜய்யின் 'மாஸ்டர் பிளான்' ஆரம்பம்!