இனியும் இதை செய்யாவிட்டால் அதிமுகவை காப்பாற்ற முடியாது...!! குமுறிக்குமுறி வெடிக்கும் அதிமுக Ex எம்பி...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 3, 2020, 4:06 PM IST
Highlights

எனவே சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கும் வகையில் அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கிறேன்.
 

குடியுரிமைச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு அதிமுவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார் .  ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட தனது மகன்,  மகள் தோல்விக்கு இதுதான்  காரணம் என அவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மாவட்ட கவுன்சிலர் பதவியானாலும் சரி,  ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களானாலும் சரி அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.  

இது குறித்து தெரிவித்துள்ள அவர்,  குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால்தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு இந்தளவுக்கு  தோல்வி ஏற்பட்டுள்ளது  என்றார்,  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் காரணமாக இஸ்லாமியர்கள் மனதில் மத்திய பாஜக அரசின் மீதும்,  அதற்கு உறுதுணையாக உள்ள அதிமுகவிடம் சிறுபான்மையின மக்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார்,  எனவே உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில்  மட்டுமல்ல நாடு முழுவதிலும் சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது .  எனவே சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கும் வகையில் அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கிறேன். 

இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன், இதை உணர்ந்து  தேசிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அதிமுக அரசு சொல்லும் என நம்புகிறேன் .  அசாமில் மட்டுமே தேசிய குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக கூறியதன் அடிப்படையில்தான்,  நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது என்று அப்போது அன்வர் ராஜா விளக்கம் அளித்தார் . 

 

 

click me!