அதிமுகவுக்கு 3 எம்.பி. பதவிகள் … ஒன்று அன்புமணிக்கு… மற்றொன்று தம்பிதுரைக்கு !! இன்னொன்று யாருக்கு தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Jul 2, 2019, 11:53 PM IST
Highlights

மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக தேர்தலில் அதிமுகவுக்கு மூன்று எம்.பி.பதவிகள் கிடைக்கவுள்ள நிலையில் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஒன்று கூட்டணிக் கட்சியான பாமகவுக்கும்,  தம்பிதுரைக்கு  ஒன்றும் மற்றொன்று முனுசாமி அல்லது மைத்ரேயனுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 3 திமுகவுக்கும், 3 அதிமுகவுக்கும்  கிடைக்க உள்ளன,

திமுகவைப் பொருத்தவரை  மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒரு சீட்டும் ஒரு சீட் தொமுச சண்முகத்திற்கும் ஒரு சீட் வழக்கறிஞர் வில்சனுக்கும்  வழங்கப்பட்டுள்ளது. 

அதிமுக தனக்கு உள்ள 3 இடங்களில் ஒன்றை பாமகவுக்கு கொடுக்கிறது. மீதமுள்ள இரண்டு இடங்களில் கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தம்பிதுரைக்கு வழங்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி சிபாரிசு செய்துள்ளார்.

மற்றொன்றை  கே.பி.முனுசாமிக்கு வழங்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் சிபாரிசு செய்துள்ளார். அதே நேரத்தில் மைத்ரேயனுக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு பாஜக மூத்த தலைவர்கள் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். 

ராஜ்யசபா பதவிக்கு கட்சிக்குள்ளும், டெல்லி மேலிடத்தில் இருந்தும் நெருக்கடி கொடுப்பதால் யாரை தேர்வு செய்வது என்று குழப்பத்தில் உள்ளது அதிமுக தலைமை. 

இறுதியாக முனுசாமி அல்லது மைத்ரேயனுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

click me!