கட்சியின் சர்வாதிகார மையம் கூடிய சீக்கிரம் ஆட்டம் கண்டு சாயும்: வயிறெரிந்து சாபமிடும் அ.தி.மு.க. பேச்சாளர்கள்!

 
Published : Jan 10, 2018, 05:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
கட்சியின் சர்வாதிகார மையம் கூடிய சீக்கிரம் ஆட்டம் கண்டு சாயும்: வயிறெரிந்து சாபமிடும் அ.தி.மு.க. பேச்சாளர்கள்!

சுருக்கம்

ADMK party dictatorial centre will soon be shaken

ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க. சார்பாக மீடியாவிடம் பேசும் அனுமதியும், உரிமையும், அங்கீகாரமும் வெகு வெகு சிலருக்கு மட்டுமே இருந்தது. அவர்களில் முக்கியமானவர் ஆவடி குமார். 

ஜெ., மரணத்துக்குப் பின் அ.தி.மு.க.வில் என்னவெல்லாமோ மாறிவிட்டது அந்த வகையில் கழக ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி கடைசி கிளையின் செயலாளர் வரை எல்லோருமே மீடியாவிடம் பேசுகிறார்கள், என்னவெல்லாமோ பேசுகிறார்கள். இதில்  மாநில நிர்வாகிகள் தொடங்கி, சிறு நிர்வாகிகள் வரை சிலர் சகட்டுமேனிக்கு பேசிவிடுகிறார்கள். இது கட்சியின் கண்ணியத்தை கேலிக்கூத்தாக்குகிறது.

இதனால் பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோர் அடங்கி மொத்தம் 12 பேர் மட்டுமே இனி மீடியாவிடம் பேச வேண்டுமென கட்சி கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. இந்த 12 பேரில் சிலர் கட்சிக்கு சமீபத்தில் வந்தவர்கள், அதேபோல் நெடுநாள் பேச்சாளர்கள் சிலருக்கு லிஸ்டில் இடமில்லை. இதில் ஆவடி குமாரும் ஒருவர். 

இதனால் கடும் டென்ஷனிலிருக்கும் குமார் “அம்மா காலத்திலிருந்தே ஊடகங்களில் பேசி வருகிறேன். இப்போது லிஸ்டில் என் பெயர் இல்லை என்பதால் எந்த  பாதிப்புமில்லை எனக்கு. என் வளர்ச்சியில் அதிருப்தியுடன் சிலர் இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு அதைப்பற்றி எந்த பிரச்னையுமில்லை. அம்மாதான் மீடியாவுடன் பேசும் அதிகாரத்தை எனக்கு தந்தார். நான் வழக்கம்போல் ஊடகங்களில் பேசுவேன்.” என்று சொல்லியிருக்கிறார். 

ஊடகங்களில் பேச அனுமதிப்பெற்றோர் லிஸ்டில் இல்லாமல் இருந்தும், ஆவடி குமார் இப்படி பேசுவது சலசலப்பை கிளப்பியிருக்கிறது. 

இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளரான வைகை செல்வன் “குழுவில் உள்ளோர் தவிர்த்து வேறு யாரும் மீடியாவுடன் தொடர்பு கொள்ள கூடாது என அறிவிப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. என்னைக்கூட அம்மாதான் அமைச்சராக்கினார். இன்று நான் அமைச்சர் இல்லை. அம்மா எனக்கு கொடுத்த பதவி என்பதற்காக அமைச்சர் நாற்காலியில் போய் நான் உட்கார முடியுமா?” என்று குமாருக்கு கொக்கி போட்டு பேசியுள்ளார். 

வைகை செல்வனின் இந்த நக்கல் பேச்சில் டென்ஷனாகியிருக்கும் வாய்ப்பிழந்த பழைய பேச்சாளர்கள் சிலர் “அம்மாதான் வைகைக்கு மந்திரி பதவி கொடுத்தாங்க. ஆனா அம்மாவே அவரோட அடாவடித்தனத்தை பார்த்துட்டு அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறிஞ்சுட்டு வெறும் எம்.எல்.ஏ.வாக்கி டம்மியா உட்கார வெச்சாங்க. ஆனா ஆவடி குமார் உள்ளிட்ட எங்க யாரையும் அம்மா மீடியாவுடன் பேசும் அனுமதியுடைய லிஸ்டுல இருந்து எடுக்கலையே? 
வைகை செல்வனெல்லாம் பேசுற அளவுக்கு எங்க நிலைமையை ஆக்குன சர்வாதிகார மையம் கூடிய சீக்கிரமே ஆட்டம் கண்டு அடியோட சாயும். உண்மையான விசுவாசியை அசிங்கப்படுத்துனா இப்படித்தான் சாபம் வந்து சேரும்.” என்று வயிறெரிந்து கூறியுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!