விஷால் இனி எந்திரிக்கவே கூடாது: ஆளுங்கட்சியின் ‘அலர்ட்’ அரசியல் ப்ளஸ் பழைய பழிவாங்கல்...!

By vinoth kumarFirst Published Dec 22, 2018, 3:16 PM IST
Highlights

இந்தப் பெயரைக் கேட்டாலே கன்னாபின்னாவென கடுப்பாகிறது ஆளுங்கட்சி தரப்பு. அதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் தான் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டை திறக்க முயன்ற விஷாலையே கைது செய்து அநியாயத்துக்கு அதிர வைத்திருக்கிறார்கள். 

விஷால்  இனி எந்திரிக்கவே கூடாது: ஆளுங்கட்சியின் ‘அலர்ட்’ அரசியல் ப்ளஸ் பழைய பழிவாங்கல். 

விஷால்!

-    இந்தப் பெயரைக் கேட்டாலே கன்னாபின்னாவென கடுப்பாகிறது ஆளுங்கட்சி தரப்பு. அதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் தான் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டை திறக்க முயன்ற விஷாலையே கைது செய்து அநியாயத்துக்கு அதிர வைத்திருக்கிறார்கள். விஷால் மீது ஆளுங்கட்சிக்கு அப்படி என்னதான் கோபம்? இதுதான் பல பேரை மண்டை காய வைத்துள்ள கேள்வி. 
இதற்கு ஆளுங்கட்சி தரப்பிலிருந்து வரிசை கட்டும் பதில்களில் ஹைலைட்டானவற்றை பார்ப்போம்....

*    ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நடந்த நடிகர் சங்க தேர்தலின் போது தி.மு.க.வோடு ஓவராக ஒட்டி உறவாடினார் விஷால்! என்பது அ.தி.மு.க.வின் கடுப்பு. இத்தனைக்கும் இந்த தேர்தல் விஷயங்களில் கொஞ்சம் கூட தலையிடவில்லை ஆளுங்கட்சி. அதையும் தாண்டி விஷால் செய்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை. 

*    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் தேவையில்லாமல் போட்டியிட்டு ஒரு சீனை கிளப்பியதும் எடப்பாடி டீமுக்கு எரிச்சல். ஆளுங்கட்சி வேட்பாளரான மதுசூதனனுக்கு ஆதரவான வாக்குகளை கலைப்பதற்காகவே தினகரனின் கையாளாக அவர் நடந்து கொண்டார்! என்பதும் ஒரு கடுப்பு. 

*    அடுத்து, சமீபத்தில் ஆளுங்கட்சி தரப்பில் ‘நியூஸ் ஜெ’ துவக்கப்பட்டபோது ‘மாச சம்பளம் வாங்கும் உங்களுக்கு எப்படி இவ்வளவு பணம்?’ என்று ட்விட் செய்து வீணாக தானே போய் வம்பிழுத்தார் விஷால். இது அமைச்சரவையை பெரிதளவில் கடுப்பாக்கியது. 

*    இதெல்லாம் போக, தி.மு.க. குடும்ப உறுப்பினருக்கு சொந்தமான சன் டி.வி.யில்  வாராவாரம் விஷால் செய்யும் ப்ரோக்ராம் சில நேரங்களில் ஆளும் தரப்பை சீண்டுகிறதாம். 

இப்படியான விஷயங்களால்தான் விஷால் மீது கெட்ட கோபத்திலிருக்கும் ஆளும் தரப்பு, ‘அவர் இனி எந்திரிக்கவே கூடாது. அடுத்தடுத்து அடக்கி ஒடுக்கணும்!’ என்று தன் தளபதிகளுக்கு கட்டளையிட்டுள்ளது. இதை முழுமையாக புரிந்து வைத்திருக்கும் விஷாலோ ‘நான் தேர்தல்ல நிக்க கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனா என்னை தொடர்ந்து சீண்டி மீண்டும் மீண்டும் போட்டியிட வைக்கிறாங்க.’ என்று பஞ்ச் அடித்திருக்கிறார். 
பாவம்ல!

click me!