கமலைப் போல் ரஜினி தைரியசாலி இல்லை! தொடர்ந்து எங்களை ஏமாற்றுகிறார்: பொங்கும் ரசிகர்கள்.

By thenmozhi gFirst Published Dec 22, 2018, 3:03 PM IST
Highlights

தாறுமாறாக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். ‘அரசியலுக்கு வருவது உறுதி!’ என்று அவர் சொல்லி ஒருவருடமாக போகிறது இன்னும் ஓரிரு நாட்களில். ஆனால் இன்னமும் வெளிப்படையான எந்த அரசியல் வளர்ச்சியையும் அவர் காட்டவில்லை!

கமலைப் போல் ரஜினி தைரியசாலி இல்லை! தொடர்ந்து எங்களை ஏமாற்றுகிறார்: பொங்கும் ரசிகர்கள். 

தாறுமாறாக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். ‘அரசியலுக்கு வருவது உறுதி!’ என்று அவர் சொல்லி ஒருவருடமாக போகிறது இன்னும் ஓரிரு நாட்களில். ஆனால் இன்னமும் வெளிப்படையான எந்த அரசியல் வளர்ச்சியையும் அவர் காட்டவில்லை! அவருக்குப் பின்னே அரசியல் முடிவெடுத்த கமலோ டாப் கியரில் எங்கோ போயிவிட்டார்! என்று பொங்குகிறார்கள். 

உண்மைதானே?! ரஜினிகாந்துக்கு பிறகுதான் கமல்ஹாசன் அரசியல் முடிவை எடுத்தார். அடுப்பை பற்ற வைத்த கையோடு கமகமவென ’மக்கள் நீதி மய்யம்’ எனும் பெயரில் கட்சி துவங்கி, அரசியல் பிரியாணி கிண்டி முடித்து இறக்கிவிட்டார். ஆனால் என்னதான் ரஜினிகாந்த் ‘நாம் கட்சி துவங்க இன்னமும் கால அவகாசம் இருக்கிறது.’ என்று கூறிவிட்டாலும் கூட அவரை அரசியல்  பரபரப்புகள் சுற்றிச் சுற்றி வரும் நிலையில் இன்னமும் எந்த வளர்ச்சியையும் அவர் காட்டாமல் இருப்பது ரசிகர்களை நோகடித்திருக்கிறது. 

கட்சி துவங்கி, அடிக்கடி கூட்டங்கள் நடத்தி, கண்காட்சி காட்டியது போதாதென்று ‘இந்தியன் 2-வுக்கு பிறகு நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை. முழு நேரமாக மக்கள் பணிக்கே வரவிருக்கிறேன்.’ என்று தடாலடியாய் அறிவித்து அசத்தியுள்ளார் கமல். இத்தனைக்கும் உலக தரத்திலான திரைத்துறை அம்சங்களை தமிழ் வாயிலாக இந்திய சினிமா உலகத்துக்கு  அறிமுகப்படுத்தும் தொழில்நுட்பத்தில் திறமையான கலைஞன் அவர். அவரே இப்படியொரு முடிவை எடுக்கும்போது! பாட்டு, ஃபைட்டு, காமெடி என்று படத்தை முடிக்கும் ரஜினியோ அடுத்தடுத்து புது படங்களை புக் செய்து கொண்டிருப்பது அ அவரது ரசிகர்களை எரிச்சலாக்கி உள்ளது. 

“போன டிசம்பர் இறுதியில அறிவிச்சார், ஆனால் இன்னமும் நாங்க சந்தோஷப்படுற மாதிரி எதுவும் நடக்கல. ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமா மாத்தியதும், அதுக்கு சிலரை நிர்வாகிகளாக்கினதும்தான் மிச்சம். அந்த தலைமை நிர்வாகிகள் பண்ற கெத்து அட்ராசிட்டிகளும், மாவட்ட நிர்வாகிகளை அவங்க பந்தாடியதால ஏற்படும் பிரச்னைகளும் மட்டும்தான் இந்த ஒரு வருட சாதனை. 

ஏற்கனவே இப்படி சறுக்கிட்டு இருக்கிற சூழ்நிலையில, தலைவர் வேற தொடர்ந்து புதுப்படங்களில் புக் ஆகிட்டே இருக்கிறார். பேட்டயோடு முடிப்பார்ன்னு நினைச்சா, அடுத்து ஏ.ஆர்.எம். படத்துல கமிட் ஆகிறார். ஆக மொத்ததுல நாங்கதான் ஏமாளி! ஏதாச்சும் சென்சேஷனலா ரஜினி டயலாக் பேசினாலே அதை வெச்சுக்கிட்டே ரெண்டு மாசம்  அவரை டிரெண்டிங்ல வைக்கிறோமில்லையா, அந்த தைரியத்துல ஏமாற்றியே இழுத்துட்டு போறார்.” என்று நோகிறார்கள்.

click me!