அஜித் அ.தி.மு.க.வுல சேரணும்னு ரொம்ப்ப்ப ஆசைப்பட்டாங்க அம்மா!: செண்டிமெண்டாய் பேசி தல-யை வளைக்க துடிக்கும் ஆளுங்கட்சி!

By Vishnu PriyaFirst Published Jan 25, 2019, 7:18 PM IST
Highlights

கையிலிருந்த பொம்மை பறிக்கப்பட்ட பச்சைக் குழந்தை மாதிரி முகத்தை கோபமாய் வைத்துக் கொண்டு அஜித் பேசிய இந்த டயலாக்கை சர்வசத்தியமாக மறந்திருக்கவே மாட்டார் கருணாநிதி

 செண்டிமெண்டாய் பேசி தல-யை வளைக்க துடிக்கும் ஆளுங்கட்சி

’மிரட்டுறாங்கய்யா!’ 

 -    கையிலிருந்த பொம்மை பறிக்கப்பட்ட பச்சைக் குழந்தை மாதிரி முகத்தை கோபமாய் வைத்துக் கொண்டு அஜித் பேசிய இந்த டயலாக்கை சர்வசத்தியமாக மறந்திருக்கவே மாட்டார் கருணாநிதி. அவர் முதல்வர் கருணாநிதிக்கு கலையுலகம் சார்பாக பாராட்டு விழா நடந்தபோது அதில் அத்தனை உச்ச நட்சத்திரங்களையும் கலந்து கொள்ள அழைத்தனர். தனிமை விரும்பியான அஜித் வர இயலவில்லையென மறுத்தபோது வர்புறுத்தி அழைத்தார்களாம். 

கோபத்தோடே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜித், மேடையிலேறி ‘நிகழ்ச்சியில கலந்து கொள்ள சொல்லி மிரட்டுறாங்கய்யா!’ என்று மைக்கில் கொதித்துக் கொந்தளித்துவிட்டார். கருணாநிதியை ஷாக்கில் உறைய வைத்த சம்பவம் இது. அஜித் அப்படி வெடித்தபோது ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டியது கருணாநிதிக்கு விழுந்த மிகப்பெரிய அடி. 

அந்த நொடி முதலே அஜித்தை தன் இனமாக பாவிக்க துவங்கிவிட்டது அ.தி.மு.க. சினிமா உலகில் செல்வாக்கு வைத்திருக்கும் அக்கட்சி வி.வி.ஐ.பி.க்கள் அஜித்துக்கு ஆறுதல் சொல்வது போலவும், அவரது தைரியத்தை பாராட்டுவது போலவும் பேசி நைஸாக அவருக்கு நூல் விட்டுப் பார்த்தனர். ஆனால் ‘பிடிவாத வெறியனான அஜித்’ அவர்களின் குறிப்பறிந்து கதவை இறுக்க சாத்திவிட்டார். 

இதெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்துக்கு சென்று கொண்டேதான் இருந்தது. ஜெயலலிதாவுக்கு அஜித் மீது தனி பிரியம் எப்போதுமே இருந்தது. தி.மு.க. ஆதரவு இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய் துவக்கத்தில் இருந்தே அரசியலை குறிவைத்தே நடிக்க வைக்கப்பட்டதில் ஜெ.,வுக்கு அவரை பிடிக்கவில்லை. ஆனால் பிடிவாதம், தனித்துவம், கரீஷ்மா, மக்களை ஈர்க்கும் திறன்! என்று பல விஷயங்களில் தன் போலவே வளர்ந்து வந்த அஜித்தை ஜெ.வுக்கு வெகுவாய் பிடித்தது. அதனால் அவர் தன் கட்சியில் சேர்ந்தால் நல்லது! என்று நினைத்தார்தான். ஆனால் இதற்காக அவராக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஜெ.,வின் குறிப்பறிந்து அஜித்தை அ.தி.மு.க.வில் கோர்த்துவிட்டு தலைமையிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்ள 2016 தேர்தல் வரையில் கூட சில சீனியர் அ.தி.மு.க.வினர் நினைத்தனர், முயன்றனர். ஆனால் தல யிடம் ‘பல்பு’ வாங்கியதுதான் மிச்சம். மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அஜித் பறந்து வந்து காட்டிய பாசத்தையும் அ.தி.மு.க. மனதில் பதிய வைத்திருந்தது. 

இந்த சூழலில், இப்போது விஸ்வாசம் - பேட்ட பட மோதலில் தாறுமாறாக ரஜினியை வென்றிருக்கிறார் அஜித். ரசிகர் மன்றங்கள் மட்டுமில்லாது அரசியலுக்கு ஆயத்தமாகி நிற்கும் நிலையிலும் ரஜினியின் படத்தை விட, ரசிகர் மன்றங்களை கலைத்தேவிட்ட அஜித்துக்கு கிடைத்திருக்கும் பல மடங்கு அதிக ஆதரவானது தல-யை விஸ்வரூப படுத்திக் காட்டியிருக்கிறது தமிழக அரசியலில். 

அதனால்தான் தாமரையை மலர செய்ய ஏதாவது ஒரு மருந்து கிடைத்திடாதா?...என்று துடிக்கும் தமிழக பி.ஜே.பி.யின் சார்பாக அதன் மாநில தலைவர் தமிழிசை சமீபத்தில் திருப்பூரில் சில அஜித் ரசிகர்கள் தங்கள் கட்சியில் இணைவதை பெரிய விஷயமாக்கி காட்டி, அஜித்தையும் மறைமுகமாக பி.ஜே.பி.க்குள் அழைத்தார். ஆனால் அதற்கு அஜித் கொடுத்த அறிக்கை அதிரடி எல்லோருக்கும் தெரியும். 

ஆனால் இந்த பரபரப்புகளை பார்த்து பதறிவிட்டது அ.தி.மு.க. காரணம், விட்டால் எங்கே எதிரும் புதிருமாக பேசிப் பேசியே பி.ஜே.பி.யும் அஜித்தும் இணைந்துவிடுவார்களோ? என்கிற பயம்தான். பல வருடங்களாய் தாங்கள் தூண்டிலோடு காத்திருக்கும் திமிங்கலத்தை ஜஸ்ட் லைக் தட் ஆக தாமரை உறிஞ்சிவிடுமோ? என்று பதறுகிறார்கள். அந்த பதற்றத்தின் காரணமாகத்தான் அமைச்சர் ஜெயக்குமார் அப்படியே அஜித்தை சிலாகித்து சின்னதாக பேட்டி துணுக்கை தட்டிவிட்டார். 

ஆனாலும் அசைந்து கொடுக்காத அஜித்தை...சென்டிமெண்டாக சாய்த்திட, ’அஜித் அ.தி.மு.க.வில் இணைய அம்மா அவர்கள் ஆசைப்பட்டார்கள். அஜித்தின் திருமணத்துக்குப் போய் நின்று ஏதோ தன் மகன் திருமணத்தை நடத்துவது போல் எவ்வளவு பாசமாக, அன்பொழுக அம்மா நிற்கிறார்!’ என்று உருக்கமாக டயலாக்கை தட்டிவிட்டு, அ.தி.மு.க.வின் இணையதள டீமை சேர்ந்த சிலர் நைஸாக இதை வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

இதற்கு சாட்சியாக அஜித் திருமணத்தில் ஜெயலலிதா பரிசளித்து வாழ்த்தும் போட்டோக்களையும் கோர்த்திருக்கிறார்கள். ஆக தல திமிங்கலத்துக்கு வலையே வீசியிருக்கிறது எடப்பாடி டீம். ஆனால் அஜித்தின் திருமணத்தில் தங்களின் தலைவரும் சென்று வாழ்த்திய படம் தி.மு.க.வினரின் கையில் இருக்கிறது. ஆனால் ‘அவர் எந்த காலத்திலும் நம்ம கட்சியை ஆதரிக்க மாட்டார்!’ என்று அழுத்தமாய் நம்புவதால், கண்டுக்காமல் கடந்து போகிறது தி.மு.க. 
இஞ்சாருடா!

click me!