நாங்க மினிஸ்டர் ஆகக்கூடாதா... அதிமுகவில் உச்சகட்ட கோஷ்டி மோதல்...

By Selvanayagam PFirst Published Aug 12, 2019, 9:16 PM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள 2 அமைச்சர் பதவிகளைக் கைப்பற்ற  அதிமுகஎம்எல்ஏக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அமைச்சர் பதவி கேட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்எல்ஏக்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் திடீரென்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் 

அவர் வகித்து வந்த துறையை அமைச்சர் ஆர். பி உதயகுமார் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது

 ஏற்கனவே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணரெட்டி சிறைக்கு சென்று விட்டதால், அவர் வகித்து வந்த துறையை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கவனித்து வருகிறார்.  

இரண்டு அமைச்சர்களுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ள பதவியை கைப்பற்ற அதிமுக எம்எல்ஏக்கள் காய் நகர்த்த தொடங்கி விட்டனர், தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க கோரி,  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவர்கள் நெருக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தங்கள் தரப்பினருக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  கேட்டு வருகிறார், ஆனால் தனக்கு விசுவாசமான வர்களுக்கு  பதவி வழங்க முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 

இதனால் கட்சியில் மீண்டும் ஓபிஎஸ் அணி  இபிஎஸ் அணி என கோஸ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்ற குழப்பத்தில் உள்ள முதலமைச்சர் பழனிச்சாமி நிதானமாக இருந்து வருகிறார்.

 ஆட்சி நிறைவடைய இன்னும் மூன்றாண்டு காலம் உள்ள நிலையில் , ஆட்சிக்கு பாதகம் இன்றி  கட்டுக்கோப்பாக
கொண்டு செல்ல வேண்டும்  என்பதில் முதல்வலமைச்சர் கவனமாக உள்ளார்எனவே யார் மனதையும் புண்படுத்தாமல்பிரச்சனைகளை நிதானமாக கையாளவும் அவர் முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது

ஒபிஎஸ் தரப்பை பேசி சரிகட்டு தன் ஆதரவாளர்களுக்கே அமைச்சர் பதிவியை பெற்று தர முதலமைச்சர்  முடிவில் உறுதியாக இருப்பதாக  கூறப்படுகிறது .

click me!