அதிமுக அரசு கவிழுமா ? எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கட்கிழமை எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் !!

Asianet News Tamil  
Published : Aug 25, 2017, 06:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
அதிமுக அரசு கவிழுமா ? எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கட்கிழமை எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் !!

சுருக்கம்

admk mla meeting on coming monday

டி.டி.வி.தினகரனின் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்த வரும் திங்கட்கிழமை அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினகரனின் ஆதரவு எம்எலஏக்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதால், இந்த அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் இந்த நெருக்கடி குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை சென்னையில்  அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்க இருக்கும் இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் , எம்.பி.க்கள்  மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 

தொடர்ந்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை எப்படி சமாளிப்பது என்பத குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் சோழவம்சத்தின் பெருமை..! வரலாற்றை அசிங்கப்படுத்திய ஒவைசி..!
விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!