
கொறடாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநரிடம் மனு அளித்தது தவறு என்றும் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என சபாநாயகர் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நீண்ட நாள் இழுப்பறிக்கு பிறகு அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்துள்ளது. ஆனால் ஏற்கனவே ஒன்றி இருந்த டிடிவியையும் சசிகலாவையும் எடப்பாடி நீக்கியதாலேயே இந்த இணைப்பு சாத்தியமாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கு சென்று விட்டனர். முன்னதாக முதலமைச்சரை நீக்க வேண்டும் என ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.
இதைதொடர்ந்து கடிதம் அளித்த 19 எம்.எல்.ஏக்களும் அரசு எதிராக செயல்பட்டதாக கூறி நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கொறடாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநரிடம் மனு அளித்தது தவறு என்றும் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என சபாநாயகர் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் தனபால் நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.