அணி மாறத் தயாராகும் எம்.எல்.ஏ.க்கள்... தமிழகத்தில் விரைவில் ஆட்சி கலைப்பு?

 
Published : Apr 13, 2017, 05:13 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
அணி மாறத் தயாராகும் எம்.எல்.ஏ.க்கள்... தமிழகத்தில் விரைவில் ஆட்சி கலைப்பு?

சுருக்கம்

admk mla going to change the team

டிடிவி தினகரன் வசம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் ஓ.பி.எஸ். பக்கம் செல்ல தயாராக இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.இதனால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி கலைப்பு செய்யப்படும் சூழல் எழுந்துள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்குப் முன், ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன், இடைத்தேர்தல் ரத்துக்குப் பின் என நிலையற்ற நிலையில் தமிழக அரசியல் களம் நிலவுகிறது. 

நித்தம் நித்தம் காட்சிகள் அதிரடி சரவெடியாக மாறி வருகின்றன. இதற்கிடையே  அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனை பிற அமைச்சர்களிடையேயும், எம்.எல்.ஏ.க்களிடமும் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

எப்போது வேண்டுமானாலும் இவர்களின் இல்லத்திற்கு வருமான வரித்துறை சோதனைக்காக செல்லலாம் என்ற சூழல் உருவாகி உள்ளது.

இதற்கிடையே சோதனையில் இருந்து தப்ப தினகரன் தரப்பில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதன்படி வெறும் 6 எம்.எல்.ஏ.க்கள் அணி மாறினால் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து பதவி இழக்க நேரிடும்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!