தொண்டர்களுக்கு மசாலா ஐட்டங்களுடன் கறிக்கோழி தீபாவளி கிஃப்ட் - அசத்திய அதிமுக எம்எல்ஏ

Published : Nov 06, 2018, 06:51 PM IST
தொண்டர்களுக்கு மசாலா ஐட்டங்களுடன் கறிக்கோழி தீபாவளி கிஃப்ட் - அசத்திய அதிமுக எம்எல்ஏ

சுருக்கம்

திருவண்ணாமலை அருகே கட்சி தொண்டர்களுக்கு, அதிமுக எம்எம்ஏ தீபாவளி பரிசாக ஆளுக்கு ஒரு கறிக்கோழி வழங்கினார். மேலும், அதை சமைக்க தேவையான மசாலா பொருட்களையும் கொடுத்து அசத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ பன்னீர் செல்வம், தீபாவளிக்கு வழக்கம் போல பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ் வழங்குவதை தவிர்த்து வித்தியாசமான முயற்சியில் இறங்கினார்.

அதிமுக தொண்டர்களை மகிழ்விக்க ஆளுக்கொரு கறிக்கோழியையும், அதை சமைப்பதற்கு தேவையான மசாலா பொருட்கள், பிரியாணி அரிசி, நெய் பாக்கெட்டை ஆகியவற்றை வழங்கினார்.

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 5000 பேருக்கு, தலா ஒரு கோழி மற்றும் பொருட்களை கொடுத்து மகிழ்ச்சியடைய செய்தார். மேலும், கடிகாரம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

வழக்கமாக தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், சொந்த கட்சி தொண்டர்களையே கண்டு கொள்வதில்லை. ஆனால் கலசபாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம், வித்தியாசமான அனுகுமுறையால் அதிமுக தொண்டர்களை கவர்ந்துவிட்டார் என கட்சியினர் கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி
விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!