18 ஆண்டுகளுக்கு பின் பெல்லாரியை கைப்பற்றிய காங். - பாஜக வேட்பாளர் படு தோல்வி

By Selvanayagam PFirst Published Nov 6, 2018, 6:10 PM IST
Highlights

கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. கடந்த 1999ம் ஆண்டுக்கு பிறகு, பெல்லாரி தொகுதியில் முதல் முறையாக பாஜக தோல்வி கண்டு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2019 லோக்சபா தேர்தல்களில் பாஜகவுக்கு கர்நாடகாவில் சவால் காத்திருப்பதாக காங்கிரஸ், ஜேடிஎஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெல்லரி தொகுதியை 1999ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பாஜக கோட்டை விட்டது பெரிய இழப்பு எனவும் கூறப்படுகிறது.

குறிப்பாக பெல்லாரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர், முன்னாள் எம்.பி. ஜே.ஷாந்தா மாவட்டத்தின் அரசியலுக்கு புதிதாக வந்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ்.உக்ரப்பாவிடம் 2.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளார்.

ஷிமோகா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றாலும் இடைவெளி குறைந்துள்ளது. இந்தத் தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.எஸ்.ராகவேந்திரா, மஜதவின் மது பங்காரப்பாவை 52,148 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 2014-ல் இதே தொகுதியில் எடியூரப்பா 3.63 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாண்டியாவில் பொதுவாக காங்கிரஸ் கட்சிக்கும் மஜதவுக்குமே போட்டியிருக்கும், ஆனால் இம்முறை கூட்டணி என்பதால் அதன் வேட்பாளர் ஷிவராமகவுடா பாஜக வேட்பாளர் சித்தராமையாவை காட்டிலும் 3.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்று தக்கவைத்துள்ளதால், கார்நாடக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

click me!