அதிமுக அமைச்சர் நள்ளிரவில் செய்த படுபயங்கரம்..!! கையும் கலவுமாக பிடித்து வச்சிசெய்த கிராம மக்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 15, 2019, 8:32 AM IST
Highlights

வணிக வளாகம் கட்டி அதற்கான வாகனங்கள் வந்து செல்ல வசதியாகவும், அவற்றை நிறுத்திடவும் ஓடைக்கால்வாயை மூடி கான்க்ரீட் தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கால்வாயின் தரையில் கான்க்ரீட் ஊற்றி மேலே முற்றிலுமாக மூடுவதற்கான பணிகளை பெட்ரோல் பங்க் நிர்வாகம் செய்து வருகின்றது. இரவோடு இரவாக கான்க்ரீட் போடுவதற்காக கம்பிகளை கட்டி கால்வாயில் வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அமைச்சரின் நிலத்திற்காக மழைநீர் கால்வாய் ஆக்கிரமிக்கும் பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தடப்பெரும்பாக்கத்தில் அமைச்சர் பெஞ்சமினுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க்கை ஒட்டி மழைநீர் செல்லக்கூடிய ஓடைக்கால்வாய் செல்கின்றது. திருவேங்கடபுரம், தடப்பெரும்பாக்கம், உப்பரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் தேங்கும் மழைநீர் இந்த கால்வாய் வழியே தான் வெளியேறும். இந்நிலையில் இந்த கால்வாயினை சுமார் 150மீட்டர் நீளத்திற்கு ஆக்கிரமித்து கான்க்ரீட் தளம் போட்டு முற்றிலும் மூடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

வணிக வளாகம் கட்டி அதற்கான வாகனங்கள் வந்து செல்ல வசதியாகவும், அவற்றை நிறுத்திடவும் ஓடைக்கால்வாயை மூடி கான்க்ரீட் தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கால்வாயின் தரையில் கான்க்ரீட் ஊற்றி மேலே முற்றிலுமாக மூடுவதற்கான பணிகளை பெட்ரோல் பங்க் நிர்வாகம் செய்து வருகின்றது. இரவோடு இரவாக கான்க்ரீட் போடுவதற்காக கம்பிகளை கட்டி கால்வாயில் வைத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை தடுத்து நிறுத்தி கால்வாயில் இருந்த கம்பிகளை எடுத்து பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 4 முறை போராட்டம் நடத்தியும் கால்வாய் ஆக்கிரமிப்பை தடுக்காதது ஏன் என போலீசாரிடம் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

அவர்களிடம் சமாதானம் பேசிய போலீசார் தற்காலிகமாக பணிகளை நிறுத்துவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மழைநீர் செல்லக்கூடிய ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் எச்சரித்தனர். அதிமுக அமைச்சர் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் மேற்கொண்ட சாலை மறியல் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.
 

click me!