
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் யாரு பேசுவதில்லை எனவும், அவரை கட்சியில் இருந்து நீக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள் எனவும் அதிமுக எம்.பியும் துணை சபாநாயகருமான தம்பிதுரை கேட்டு கொண்டுள்ளார்.
மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக எம்.பியும் துணை சபாநாயகருமான தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :
முன்னர் பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த போது தான் முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவ் வீடு, அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது அதை பற்றி பன்னீர் வாய்திறக்கவில்லை.
அதிமுகவில் இருப்பது கருத்து வேறுபாடு தான் பேசி தீர்த்துகொள்வோம்.
சசிகலாவிடம் யாரும் பேசுவதில்லை. சசிகலாவை நீக்க வேண்டுமென்றால் வழி சொல்லுங்கள்.
இரு அணிகள் இணைப்பு நின்றுவிட்டதாக ஊடகங்கள் தான் கூறுகின்றன.
மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும், இரு அணிகளும் ஒரு அணிகளாக மாறுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக சசிகலாவுக்கு ஆதரவாகவும் மிகுந்த விசுவாசியாகவும் திகழ்ந்த தம்பிதுரை, அவருக்கு பிறகு அப்படியே டிடிவி தினகரனுக்கு அதரவாக செயல்பட்டார்.
தற்போது இரு அணிகள் இணைப்புகளுக்கு பாலமாக இருக்க விரும்புகிறேன் என பேட்டியெல்லாம் கொடுக்கிறார்.
இவரை எந்த வரிசையில் வைக்கலாம் வழி சொல்லுங்களேன்...!!!