
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எப்பொழுது இடைத்தேர்தல் வந்தாலும் மதுசூதனனே வெற்றி பெறுவார் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒ.பி.எஸ் தரப்பில் மண்ணின் மைந்தன் மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
ஆனால் மற்ற கட்சிக்காரர்களின் பணபட்டுவாடா காரணத்தால் தேர்தல் ரத்து செய்யபடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மதுசூதனன் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பெரிதும் வரவேற்ப்பு இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ஸ்டாலினும் டிடிவி தினகரனும் பணபட்டுவாடா செய்து தேர்தலை ரத்து செய்துவிட்டார்கள். ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எப்பொழுது இடைத்தேர்தல் வந்தாலும் மதுசூதனனே வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.