
36 ஆண்டுகளாக முதல்வருடன் அனைத்து நேரங்களிலும் உடனிருந்தவர். அம்மாவிவின் அனைத்து நடவடிக்கைகளையும் உடனிருந்து பார்த்தவர் சின்னம்மா. அம்மாவின் எண்ணமறிந்தவர். இக்கட்டான இந்த நேரத்தில் நீங்கள் தான் தலைமை ஏற்கணும் என்று வலியுறித்தியதாக செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
கழகத்தை கட்டிகாக்கும் ஒரே தலைமை நீங்கள் தான் என்று ஒட்டுமொத்தமாக அனைத்து நிர்வாகிகளும் வலியுறுத்தி சொன்னோம் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கட்சித்தலைமை ஏற்க திறமை வாய்ந்தவர் சசிகலா தான் என்று எம்பி வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
கட்சிக்கு முதல் தேவை அனைவராலும் ஏற்றுகொள்ளப்படக்கூடிய அனைவர் ஆன்மாவிலும் ஸ்பிரிட் கொண்டுவரக்கூடிய தலைவர். அதற்கு அவருக்கு தகுதி இருக்கிறது என்று மா.பா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.
தம்பி துரை : நானும் முன்பே இதே கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளேன். கழலகத்தை வழி நடத்தக்கூடிய தகுதி உள்ள ஒரே தலைவர் அவர்தான் என்று மன்றாடி கேட்டுள்ளேன், வலியுறுத்தியுள்ளேன். மக்களுடைய இயக்கம் இது மக்கள் இயக்கத்தை வழி நடத்த கூடியவர் அம்மா , அவர்கள் எண்ணத்தை அறிந்தவர் சின்னம்மா அவர்கள்.
அவர்களுடைய ஒவ்வொரு கால கட்டத்திலும் அம்மாவுக்காக சிறையில் இருந்தவர் சின்னம்மா அவர்கள். வேண்டுமென்றே ஊடகங்கள் ஜாதி மதத்தை இழுக்கின்றனர். மக்களை ஒன்று படுத்தும் வழிகாட்டியாக அம்மாவுக்கு அடுத்து சின்னம்மா தான் எனபது எனது ஆணித்தரமான கருத்து.
தொண்டர்களின் கருத்தும் என் கருத்தும் ஒன்று தான். சின்னம்மா தான் தலைமை ஏற்கணும்னு வலியுறுத்துகிறோம். சின்னம்மா கண்ணீர் மல்கதான் எங்களை வழி அனுப்பி வைத்தார். 37 ஆண்டு காலம் இன்ப துன்பங்களை பங்கு போட்டு கொண்டவங்க .
ஏழைகளை காக்கும் எண்ணம் கொண்டவர் சின்னம்மா தான். அம்மாக்காக சின்னம்மா தனது குடும்பத்தையே ஒதுக்கி வைத்தவர். அம்மாவின் பிம்பமாக தான் சின்னமாவை பார்க்கிறோம்.
சசிகலா தலைமை ஏற்றால்தான் அதிமுக சிறப்பாக இருக்கும்: எம்எல்ஏ பழனியப்பன்
இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அதிமுகவை காப்பாற்ற சாசிகலாவால் மட்டுமே முடியும்: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி