மூன்றில் இரண்டை கைப்பற்றும் ரஜினி... அதிர்ந்து கிடக்கும் அதிமுக கூடாரம்!?

Asianet News Tamil  
Published : Jan 17, 2018, 02:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
மூன்றில் இரண்டை கைப்பற்றும் ரஜினி... அதிர்ந்து கிடக்கும் அதிமுக கூடாரம்!?

சுருக்கம்

ADMK loss their victory for rajinikanth says TOI survey

தற்போது தமிழகத்தில் சட்ட சபைத் தேர்தலை நடத்தினால் கடந்த 2016 தேர்தலை விட திமுகவுக்கு 32 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். தேர்தல் நடைபெற்றால் திமுக 130 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும். அதிமுகவோ படுதோல்வியைச் சந்திக்கும். வெறும் 68 இடங்கள்தான் கிடைக்கும். 2016-ல் வென்ற 68 தொகுதிகளை அதிமுக இழக்கும். அதிமுக வசம் இருக்கும் 33 தொகுதிகளை ரஜினிகாந்திடம் பறிகொடுக்கும் என வந்துள்ள சர்வே முடிவு அதிமுகவை அதிரச் செய்துள்ளது.

இந்தியா டுடே- கார்வி நிறுவனம் இணைந்து தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைக்க முடியாது என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு அதே நேரத்தில் அரசியலில் ரஜினி வெல்ல முடியும் என 53% பேரும் ரஜினியால் வெல்ல முடியாது என 34% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என 13% பேர் கூறியுள்ளனர்.

2016ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தலைமையின் கீழ் 135 தொகுதிகளில் வென்ற அதிமுக ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நடந்த கூத்தால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உள்ளது. கடந்த 2016 தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்தவர்களில் 3ல் ஒரு வாக்காளர் வாக்களிக்க விரும்பவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் 60 சதவீத வாக்காளர்களின் வாக்குகளும் ரஜினிகாந்த்க்கு கிடைக்கும் மீதமுள்ள 26 சதவீத வாக்குகள் திமுகவிற்கு கிடைக்கும்.

ஆக ரஜினியின் அரசியல் வருகையால் டேமேஜ் ஆவது என்னவோ அதிமுக தான் என்பதை இந்த கருத்துக்கணிப்பு முடிவு அம்பலமாக்கியுள்ளது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக, ரஜினி எத்தனை இடங்களை பிடிப்பார்கள்?

கடந்த தேர்தலை போது கூடுதலாக 32 தொகுதிகளையும், ரஜினி 33 தொகுதிகளையும் கைப்பற்றுவார் என்றும் கருத்துக்கணிப்பு சொல்கிறது. அதிமுக 135ல் இருந்து சரிந்து 68 தொகுதியை மட்டுமே வென்று ரஜினியிடம் தங்களது வாக்குகளை பறிகொடுக்கும்.

அதேபோல, ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைக்க முடியாது

ரஜினி வெல்ல முடியும் என 53% சதவிகித வாக்கும், ரஜினியால் வெல்ல முடியாது என 34% சதவிகித வாக்கும் கருத்து கணிப்பு முடிவு காட்டுகிறது. மேலும், ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என 13% பேரும் வந்துள்ளது.  அதிமுக 135ல் இருந்து சரிந்து 68 தொகுதியை மட்டுமே வென்று ரஜினியால் படு தோல்வியை சந்திக்கும் என வந்த சர்வே முடிவால் அதிமுக வட்டாரம் அதிர்ந்து கிடக்கிறதாம்.

PREV
click me!

Recommended Stories

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி..? கடந்த முறை 6, இம்முறை 10 சீட் கேட்கும் சிபிஎம்..?
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!