அண்ணாவுக்கு 'பாரத ரத்னா'... சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்... ஸ்கோர் செய்யும் எடப்பாடி அரசு

By sathish kFirst Published Sep 9, 2018, 6:19 PM IST
Highlights

சென்ட்ரல் ரயில் நிலைத்திற்கு எம் ஜி ஆர் பெயர் சூட்ட மத்திய அரசுக்கு கடிதம், 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மறைந்த எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்க அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் கூட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது 7 பேரை விடுவிக்கும் வகையில் முடிவு எடுக்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தித்துக்கு பிறகு ஜெயக்குமார், 7 பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்மானமாக இது அமைந்துள்ளது.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 7 பேரை விடுவிக்க பரிந்துரைத்த அமைச்சரவையின் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்ளாள் அமைச்சர் எம்.ஜி.ஆரின் பெயர் சூட்ட தீர்மானம் இயற்றப்பட்டதாக கூறினார்.

முன்னதாக மறைந்த அறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 

 

click me!