யார் விட்ட சாபமோ... எடப்பாடி அரசுக்கு தொடர்ந்து விழும் சறுக்கல்!

By sathish kFirst Published Aug 21, 2018, 5:53 PM IST
Highlights

அதிமுக எந்த காரியத்தை தொட்டாலும் நினைத்ததை சாதிக்கும் வழக்கம் உடையது ஆனால் சமீபகாலமாக நடக்கும் எந்த விஷயங்களும் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றே கூறலாம். 

அதிமுக தலைமையிலான அரசு  எந்த காரியத்தை தொட்டாலும் நினைத்ததை சாதிக்கும் வழக்கம் உடையது ஆனால் சமீபகாலமாக நடக்கும் எந்த விஷயங்களும் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றே கூறலாம். ஏற்கனவே தற்போது நடந்துவரும் ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் தான் இருக்கின்றனர். இதனை சமீபத்தில் நடைபெற்ற கருத்து கணிப்பே தெரிவித்திருக்கிறது. 

இதனிடையே மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்வுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
8 வழி சாலை திட்டம் கூட இது போன்ற செயல்பாடுகளில் ஒன்று தான் . சென்னை-சேலம் இடையேயான  இந்த 8 வழி சாலை விவசாய நிலங்கள் வழியாக போக இருப்பதால் 7000 ஏக்கர் நிலத்தை இந்த திட்டத்திற்காக அரசு எடுத்து கொண்டது. 

இதில் பெரும்பாலவை விளை நிலங்கள். தங்கள் விளை நிலங்களை எடுத்து கொடுக்க மனமின்றி கதறி அழுது போராட்டம் நடத்தினர் மக்கள். ஆனாலும் அரசு மக்களுக்காக மனமிறங்காமல் நிலங்களை கையகப்படுத்த தொடங்கியது.
கதறி அழுதபடி பல விவசாயிகள் தங்கள் இடத்தை விட்டு கட்டாயமாக அகற்றப்பட்டனர்.

விவசாய நாடான இந்தியாவில் விளைநிலங்களையும்,13000க்கும் மேற்பட்ட மரங்களையும் அழிக்கு இந்த திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி முன்னதாக மக்களிடம் முறையாக அறிவிக்காமல் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அரசி கண்டித்திருக்கிறார்.

மேலும் நிலங்களை கையகப்படுத்துவதற்கும் ,மரங்களை வெட்டுவதற்கும் இடைக்கால தடை விதித்திருக்கிறார். மேலும் இந்த வழக்கினை வரும் செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார். இந்த இடைக்கால தடை நிரந்தர தடையாக வேண்டும் என்பதே தற்போது பொதுமக்களின் விருப்பமாக இருக்கிறது. 

இதே போல தான் மெரினாவில் கலைஞருக்கு இடம் மறுக்கப்பட்ட வழக்கில் கூட திமுகவினர் தமிழக அரசின் முடிவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காடி ,மெரினாவில் கலைஞரை நல்லடக்கம் செய்ய அனுமதி பெற்றனர்.
இதனிடையே ஸ்டெர்லைட் விவகாரத்திலும் அரசு எடுத்தமுடிவு தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. 

ஸ்டெர்லைட் ஆலைய மூட தமிழக அரசு போட்ட அரசாணையை,  கேரள வெள்ளம் குறித்த பரபரப்பின் போது யாரும் கவனிக்காத தருணத்தில்  ரத்து செய்து உள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம். 8 வழி சாலை வழக்கு , கலைஞரின் மெரினா வழக்கு, ஸ்டெர்லைட் விவகாரம் என சமீபகாலமாக சந்திக்கும் அனைத்து வழக்குகளிலுமே சறுக்கலை தான் சந்தித்து வருகிறது தமிழக அரசு

click me!