இதையெல்லாம் பார்த்து அம்மா ஆன்மாவே சிரிக்கும்... எடப்பாடியை கலாய்க்கும் அதிமுகவினர்!

Published : Sep 20, 2018, 12:07 PM IST
இதையெல்லாம் பார்த்து அம்மா ஆன்மாவே சிரிக்கும்... எடப்பாடியை கலாய்க்கும் அதிமுகவினர்!

சுருக்கம்

ராஜீவ் கொலை கைதிகள் ஏழு பேர் விடுதலை விஷயத்தில் தங்களுக்கு சம்மதமே! என்று சொல்லி தமிழக மக்களின் அப்ளாஸ் வாக்கு வங்கியை அள்ளிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறது எடப்பாடியார் டீம். 

ராஜீவ் கொலை கைதிகள் ஏழு பேர் விடுதலை விஷயத்தில் தங்களுக்கு சம்மதமே! என்று சொல்லி தமிழக மக்களின் அப்ளாஸ் வாக்கு வங்கியை அள்ளிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறது எடப்பாடியார் டீம். அவ்வளவு லேசுல உங்க கனவு பலிக்காது மிஸ்டர் பழனிசாமி! என்று கவர்னர் தரப்பு அந்த விவகாரத்தை கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த விடுதலையை காங்கிரஸ் எதிர்க்கும்! என்று எதிர்பார்த்தனர் அ.தி.மு.க.வினர். ஆனால் ராகுல்காந்தியோ ‘அவர்கள் விடுதலையில் எங்கலுக்கு ஆட்சேபணையில்லை.’ என்று கூறிவிட ஒட்டு மொத்த அப்ளாஸும் ராகுலை நோக்கி திரும்பியிருக்கிறது. 

ஏற்கனவே பி.ஜே.பி. கடுப்பேற்ற, இப்போது காங்கிரஸும் இதில் ஸ்கோர் செய்துவிட, ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வினர் டென்ஷனாகிவிட்டனர். என்ன செய்யலாம்? என்று உட்கார்ந்து யோசித்தவர்கள், இதே ஈழ விவகாரத்தை வைத்தே தி.மு.க மற்றும் காங்கிரஸுக்கு சேர்த்து வைத்து இனிமா கொடுக்க முடிவெடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் கையில் சிக்கியிருப்பதுதான் எட்டு வருஷத்துக்குன் முன்பு ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை. 2010 ஜூலை 1-ல் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். 

அதில் ‘ஈழப்போரில் அப்பாவி மக்கள் படுகொலைக்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கும்பலை, போர்க்குற்றவாளியாக அறிவித்து விசாரிக்க வேண்டும்.’ என்று அதில் சொல்லியிருந்தார். அதாவது, இந்தியாவில் அப்போது மத்தியிலிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. அப்போது இலங்கையில் ஈழ மக்களுக்கு எதிராக நடந்த யுத்தத்தில் இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு உதவியளித்ததாக இலங்கையின் அதிபராக இருந்த ராஜபக்‌ஷே பகிரங்கப்படுத்தியிருந்தாராம். 

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர், ஈழ தமிழர்களுக்கும் தலைவன் என்று சொல்லி தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் கருணாநிதி, அந்த கூட்டணியிலிருந்தும் இதை தடுக்கவில்லை எனவே இவரும் அந்த பயங்கரவாதத்தில் கூட்டாக இருந்திருக்கிறார்! என்பதே ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையின் அடிப்படை. 

எட்டு ஆண்டுகளுக்கு முன் விடுக்கப்பட்டு தூசு ஏறிப்போய் கிடக்கும் அந்த அறிக்கையை எடுத்து வைத்துத்தான் இப்போது அரசியல் செய்ய முயற்சிக்கிறது அ.தி.மு.க. அரசு. ஈழத்தமிழர் படுகொலைக்கு  உடந்தையாக செயல்பட்ட தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அரசின் செயலை, சர்வதேச போர்க்குற்றமாக கருதி, தண்டிக்க வேண்டும் என்று மா.செ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த தீர்மானத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வரும் 25-ம் தேதியன்று மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டத்தை நடத்துகிறது அ.தி.மு.க. 

இந்த தகவல்களை மாஜி அமைச்சர் கே.பி.முணுசாமின் உறுதிப்படுத்த, ”ஆமா! இப்போ எரியுற பிரச்னை ஆயிரம் இருக்குது கட்ச்சியில. ஆனால் எட்டு வருஷத்துக்கு முன்னாடி அம்மா சொன்னதை எடுத்து வெச்சுக்கிட்டு ஆடுறீங்களா?இதையெல்லாம் பார்த்து அம்மா ஆன்மாவே சிரிக்கும். என்னா ஸ்பீடு எடப்பாடி சார் நீங்க!” என்று முணுமுணுக்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!