வெறும் அஞ்சே அஞ்சு சீட் தான் கிடைக்குமாம் ! உளவுத் துறை ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் ஆளுங் கட்சி !!

By Selvanayagam PFirst Published Mar 23, 2019, 8:17 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் 35 தொகுதிகளில் அதிமுக – பாஜக கூட்டணி மிக மோசமாக இருப்பதாகவும் அந்த கூட்டணிக்கு 5 தொகுதிகள் கிடைத்தாலே பெரிய விஷயம் என்றும்  மத்திய உளவுத் துறை அளித்துள்ள ரிப்போர்ட்டால் எடப்பாடி தரப்பு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இரண்டு கூட்டணியிலும் தொகுதிகள் பிரிக்கப்பட்டு, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு, தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய உளவுத் துறையின் ரிப்போர்ட் எடப்பாடி பழனிசாமியின் கையில் கிடைத்திருக்கிறது.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தொடங்கிய நிலையில் எடுக்கப்பட்ட அந்த ரிப்போர்ட் ஆளுங்கட்சியை கதி கலங்க வைத்திருக்கிறது. அதில் பொள்ளாச்சி சம்பவம் கொங்கு  மண்டல கவுண்டர்கள்  மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது அரசுக்கு எதிராக திருப்பியுள்ளது. மேலும் புதிய வாக்காளர்கள் மத்தியில் எடப்பாடி அரசு பெரும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது.

அது மட்மல்லாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோபமும் அதிமுக அரசுக்கு பாதகமாக அமையும் என அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் விவசாயிகளின் எண்ணமும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக உள்ளதாகவே கூறப்படுகிறது.

இப்படி ஒட்டு மொத்தமும் அரசுக்கு எதிராக இருப்பதால் 30 முதல் 35 தொகுதிகள் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராகவே உள்ளது என உளவுத்துறை ரிப்போர்ட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் அதிமுக கூட்டணிக்கு  5 இடங்கள் கிடைத்தாலே ஆச்சரிப்படும் அளவுக்குதான் உள்ளது என்று அந்த  ரிப்போர்ட் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு உளவுத் துறை எடுத்த ரிபோர்ட்டில் 15 சீட்கள் வரை கிடைக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது..

ஆனாலும் கரன்ஸி  மழையை பொழிய வைத்தாவது ஜெயித்து விட வேண்டும் என அதிமுக கங்கணம் கட்டிக் கொண்ட வேலை பார்க்க தொடங்கி விட்டனர்.

click me!