Rajendra Balaji Arrested: பரபரப்பு..!! மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் கைது..

Published : Jan 05, 2022, 01:34 PM ISTUpdated : Jan 05, 2022, 05:25 PM IST
Rajendra Balaji Arrested: பரபரப்பு..!! மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் கைது..

சுருக்கம்

3 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போலீசார் கர்நாடகாவில் வைத்து கைது செய்துள்ளனர். 

3 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போலீசார் கர்நாடகாவில் வைத்து கைது செய்துள்ளனர்.  கர்நாடகாவில் பகுதியில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி ராஜேந்திர பாலாஜி. திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்தார் என அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என ஜாமீன் கேட்டு ராஜேந்திரபாலாஜி மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரது மனுவை ரத்து செய்தததை அடுத்து, ராஜேந்திர பாலாஜி கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் தனது ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டு விட்டது என்பதை அறிந்தவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் வேக வேகமாக அங்கிருந்து தலைமறைவானார். இதுநாள்வரை அவர் எங்கு இருக்கிறார், யாருடன் இருக்கிறார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

அவர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது அவர் பெங்களூருக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும், சிலர் அவர் கேரளாவில் பதுங்கியுள்ளதாகவும், அவர் விருதுநகர் மாவட்டத்திலேயே பதுங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. போலீசார் இதுவரை பெங்களூருக்கும், கேரளா என பல மாநிலங்களுக்கு சென்று தேடியும் ராஜேந்திரபாலாஜி அகப்படவில்லை. அவர் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் பழைய பட்டன் மாடல் செல்போனை உபயோகித்து வருவதாகவும், அதனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை ட்ராக் செய்வதில் சிரமம் இருக்கிறது என்றும் போலீஸ் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியானது. 

ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவரை கைது செய்ய வேண்டும் என எந்த முன்னேற்பாடும் செய்யாததால் போலீசார் ராஜேந்திரபாலாஜி கோட்டை விட்டு விட்டார் என்ற விமர்சனமும் காவல் துறை மீது இருந்து வந்தது. விருதுநகரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி தனது ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை அறிந்ததும், வேகமாக தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அவர் எப்படியும் காரில்தான் வெளியில் வருவார் என போலீசார் அவரது வீட்டுக்கு வெளியில் காவல் காத்திருந்தனர். ஆனால் அவர் வழக்கமான வேட்டி சட்டையை தவிர்த்து லுங்கி  பனியன் உடுத்தி டாட்டா ஏஸ் வாகனத்தின் மூலம், கிளீனராக மாறி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அதே வாகனத்தின் மூலம் ஆனைக்குட்டம் அணை, புதுப்பட்டி, மங்கலம் வழியாக பயணித்து எரிச்சநந்தம் பகுதியில் பட்டாசு கம்பெனியின் அதிபர் ஒருவரின் இனோவா கார் மூலம் அழகாபுரி விளக்கு வழியாக மூணாறு சென்றுள்ளார்.

ஏறக்குறைய நான்கு மணி நேரத்தில் அவர் மாநில எல்லையை கடந்திருக்கிறார். அதன்பிறகு பெங்களூருவில் இருந்து மும்பை சென்றுள்ளது அந்த இனோவா கார். அதேபோல ஒரு தேசிய கட்சியின் பிரமுகர் உதவியுடன் தரைவழி பயணமாக டெல்லி சென்றுள்ளார் அவர். அங்கு அவரை பாதுகாத்து வருவது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த தேசிய கட்சியின் பெண் நிர்வாகி என கூறப்பட்டது. 

இதே நேரத்தில் இன்னும் பழைய போலீஸ் டெக்னிக்கை காவல்துறை பயன்படுத்துகிறது என்றும், இன்னும் அவரது செல்போனையே போலீசார் வட்டமடித்து வருகின்றனர் என்றும், ஆனால் அவரிடம் தொடர்பில் இருந்தவர்களை போலீஸ் கண்காணிக்கவில்லை என்றும் போலீஸ் மீது குற்றச்சாட்டு இருந்து வந்தது. ராஜேந்திர பாலாஜி தப்பிக்க முழு காரணமும் மாவட்ட காவல்துறை என கூறப்பட்டது. இந்த நிலையில்தான் ராஜேந்திரபாலாஜி இதோ பெங்களூரில் இருக்கிறார், அதோ கேரளாவில் இருக்கிறார் எனக் கூறி வந்த போலீஸார் கடந்த வாரம் டெல்லியில் தஞ்சம் அடைந்து இருக்கிறார் என கூறி அங்கு பறந்தனர். ஆனால் அவர் அங்குல் இல்லை. இந்நிலையில் தான் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த ராஜேந்திர பாலாஜியை போலீசார் பெங்களூரிவில் வைத்து கைது செய்துள்ளனர். 

பெங்களூருவில் பதுங்கி இருப்பதை அறிந்து போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் பி.எம் சாலையில் அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது தமிழக தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அதற்கான பரபரப்பு வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜி தனிப்படை போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

"

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!