அரசியல் காழ்ப்புணர்ச்சியே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு காரணம்… கடம்பூர் ராஜு தாக்கு!!

Published : Dec 16, 2021, 09:00 PM ISTUpdated : Dec 16, 2021, 09:02 PM IST
அரசியல் காழ்ப்புணர்ச்சியே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு காரணம்…  கடம்பூர் ராஜு தாக்கு!!

சுருக்கம்

அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சரும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சரும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கடந்த அதிமுக ஆட்சியில் பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகவும், முறைகேடுகள் மூலம் சொத்து சேர்த்ததாக புகார்கள் வெளியானதையடுத்து நேற்று அதிகாலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலத்தில் தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக Rs.4,85,72,019 சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டது. மேலும் சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2,37,34,458 பணம், 1.130 கிலோகிராம் தங்க நகைகள், சுமார் 40 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத ரூ.2,16,37,000 பணம், சான்று பொருட்களான கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவை அழிக்கும் நோக்கில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடத்துவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் மூலம் அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜுவும் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு,  அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கழகத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என தவறான கணக்கு போட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஒரு தவறான கலாச்சாரத்தை திமுக ஆட்சி ஏற்படுத்தி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதன் மூலம் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சரும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!