
திகார் சிறையிலிருந்து ஜாமினில் வெளி வந்துள்ள அதிமுக (அம்மா அணி) துணை பொதுசெயளாலர் தினகரன் வரவேற்க அவரின் வீட்டிற்கு முன்னும்,சாலை முழுவதும் குத்தாட்டம்,பேண்டு வாந்தியம் தற்போது தூள் பறக்கிறது.
தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையிலிருந்த ஜாமினில் வெளிவரும் தினகரனுக்கு திஹார் சிறை அருகே இருந்த சுவரொட்டிகளில் போஸ்டர்கள் ஒட்டி அமர்க்களப்படுத்தியுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி அவர்கள் இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இவர்கள் இருவரும் கடந்த மே 1ந்தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 34 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று பிற்பகல் சென்னை வரும் நிலையில் இன்று காலை முதலே தினகரன் வீட்டிற்கு முன்னும்,சாலை முழுவதும் குத்தாட்டம், பேண்டு வாந்தியம் பட்டாசு என பகுதியே தற்போது தூள் பறக்கிறது. அதிமுக கட்சி அலுவலகம் அமைந்துள்ள ஆழ்வார் பேட்டை பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
தினகரன் சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும், தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்திலிருந்து தினகரன் வீடு வரையிலும் பேனர்கள் என வழிநெடுகிலும் வழிநெடுக அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்க தயாராகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் தினகரன் வீடு அமைந்துள்ள அடையாருக்கு படையெடுத்துள்ளனர்.
தொண்டர்கள் வந்து குவிந்து வருவதால் கட்டுக் கடங்காத கூட்டம் காணப்பட்டது.இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.