அதிமுக - பாஜக இடையேயான டீல் முடிந்தது.. நாளை ஒப்பந்தம் கையெழுத்து..! பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா.?

Published : Mar 02, 2021, 07:02 PM IST
அதிமுக - பாஜக இடையேயான டீல் முடிந்தது.. நாளை ஒப்பந்தம் கையெழுத்து..! பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா.?

சுருக்கம்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 முதல் 26 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது.  

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு ஆகிய பணிகளை துரிதப்படுத்தியுள்ளன அரசியல் கட்சிகள்.

அதிமுக - பாமக இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டு, பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. பாஜக, தேமுதிகவுடனான அதிமுக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், பாஜகவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துவிட்ட நிலையில், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதுடன், ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது.

அதிமுக கூட்டணியில், முக்கியத்துவத்தை எதிர்பார்த்த பாஜக, பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளை விட அதிகமாக பெறுவதில் உறுதியாக இருந்தது. அந்தவகையில் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், பாஜகவிற்கு 24-26 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவிற்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது.
 

PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?