அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீட்டில் இழுபறி..! 2 மணி நேரமாக நீடிக்கும் பேச்சுவார்த்தை

By karthikeyan VFirst Published Feb 28, 2021, 9:21 PM IST
Highlights

அதிமுக - தேமுதிக இடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்துவருகிறது.
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதகால அவகாசமே இருப்பதால், ஆளும் அதிமுக, எதிர்க்கட்சி திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டை துரிதப்படுத்திவருகின்றன.

திமுகவைவிட அதிமுக தான் அதிவேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பாமகவுடனான கூட்டணியை உறுதி செய்து பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கிவிட்டது அதிமுக. 

அதைத்தொடர்ந்து நேற்றிரவு(சனிக்கிழமை) தேமுதிகவுடனான கூட்டணியை உறுதி செய்ய, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனுசாமி ஆகியோர் சந்தித்து பேசினர்.

பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட அதே 23 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் என்று தேமுதிக சார்பில் அதிமுகவிடம் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் கேபி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் இன்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) 7.40 மணி முதல் பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். அமைச்சர் தங்கமணி வீட்டில் இந்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

7.40 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 9.30 மணி வரை நீடித்துவருகிறது. பாஜகவிற்கு குறைந்தது 25 தொகுதிகளை அதிமுக ஒதுக்கும் நிலை உள்ளது. எனவே தேமுதிக கேட்கும் 23(குறைந்தது) தொகுதிகளை வழங்க அதிமுக தயக்கம் காட்டுகிறது. அதனால் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
 

click me!