நடிகர்களை விட நடிகைகள் தான் தேவை...! கோலிவுட்டில் வலை விரிக்கும் பாஜக..!

By Selva KathirFirst Published Feb 20, 2021, 12:00 PM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகததில் முன்னணி நடிகைகளை தங்கள் கட்சியில் இணைக்க அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகததில் முன்னணி நடிகைகளை தங்கள் கட்சியில் இணைக்க அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எந்த சட்டப்பேரவை தேர்தலையும் போல் இல்லாமல்இந்த சட்டப்பேரவை தேர்தலில பாஜக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் தொழில் அதிபர்கள், ஊடக பிரபலங்கள் என பலரை பாஜக தங்கள் கட்சியில் சேர்த்து வருகிறது. காங்கிரஸ் இருந்து அண்மையில் குஷ்புவை பாஜகவிற்கு அழைத்து வந்ததை அந்த கட்சி நிர்வாகிகள் மிகப்பெரிய சாதனையாக கருதி வருகின்றனர். இதே போல் நடிகர் சிவாஜியின் மூத்த மகன்அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதே போல் மேலும் பல நடிகர், நடிகைகளை பாஜக குறி வைத்துள்ளது.

Latest Videos

தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவை அடிமட்டம் வரை கொண்டு சென்று சேர்க்க நடிகர், நடிகைகள் போன்ற சினிமா பிரபலங்கள் அவசியம் என்று பாஜக முதலில் இருந்தே கருதி வருகிறது. இதனால் தான் பாஜக பிரபலமான நடிகர், நடிகைகளாக இல்லை என்றாலும் தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. அதே சமயம் நடிகர்களை விட நடிகைகளுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஏனென்றால் நடிகைகள் குஷ்பு, நமீதாவிற்கு செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டம் கூடுகிறது.

ஊடகங்களும் கூட பாஜக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட நடிகைகள் குஷ்பு, நமீதாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. எனவே மேலும் பல நடிகைகள் பாஜகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காகவே பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை வந்துள்ளதாக கூறுகிறார்கள். இவர் திரையுலகில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மூலம் சில நடிகைகளை அணுகியுள்ளதாக சொல்கிறார்கள்.

இது தவிர நடிகைகள் சிலர் இந்த தகவல் அறிந்து கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்ததாக கூறுகிறார்கள். விரைவில் தமிழகத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் வருகை தர உள்ளனர். அவர்கள் வருகையின் போது முக்கிய நடிகைகளை பாஜகவில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஒரு வார காலமாகவே சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சில நடிகைகள் பாஜகவில் இணைய முன்வந்துள்ளனர். தற்போது அவர்களுக்கான பதவி மற்றும் வேறு என்ன எல்லாம் தேவை என்பது குறித்த பேச்சு நடைபெற்று வருகிறது.

இது தவிர தமிழகத்தில் பிரபலமாக இருந்த வேறு மாநில நடிகைகளையும் பாஜக அணுகி வருகிறது- கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள நடிகைகள் தமிழகத்தில் நல்ல மார்க்கெட்டில் இருந்திருப்பார்கள். இவர்களை பாஜகவில் இணைத்தால் இந்த மூன்று மாநிலங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே அப்படி மார்க்கெட் இழந்து வீடுகளில் முடங்கியுள்ள நடிகைகளையும் பாஜக தரப்பு தொடர்பு கொண்டுள்ளதாக சொல்கிறார்கள்.

click me!