"என் டார்லிங் தெர்மாகோல் ஞானி" அமைச்சரை கலாய்த்த நடிகை கஸ்தூரி...!

 
Published : Apr 26, 2018, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
"என் டார்லிங் தெர்மாகோல் ஞானி" அமைச்சரை கலாய்த்த நடிகை கஸ்தூரி...!

சுருக்கம்

actress kasthuri To disperse the minister sellur raju

நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில், அரசியல் சார்ந்த விஷயங்ளை பற்றி தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களையும் உடனுக்குடன் தெரிவித்து வருகிறார். இதனால் இவருக்கு ரசிகர்கள் சிலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து அவருடைய ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். பின்னர் ரஜினிகாந்தை அவருடைய வீட்டிற்கே சென்று சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகர் கமலஹாசனை சந்தித்தார். மேலும் கஸ்தூரியை திமுகாவில் இணைக்க முயற்சி நடப்பதாகவும் அவரும் அதற்கு சம்மதித்து விட்டதாகவும் தகவல்கள் பரவின. 

இதற்கு பதில் அளித்த அவர் ' நான் திமுகாவில் சேருகிறேன், கமல்ஹாசன் கட்சியில் இணையப்போகிறேன் என்றெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள், அரசியலை மக்கள் கெட்ட வார்த்தையாக பார்க்கும் சூழ்நிலை இருப்பதால் உடனடியாக எந்த கட்சியிலும் சேர மாட்டேன்" என்றார்.

இந்நிலையில் ட்விட்டரில் கஸ்தூரி பதிவிடும் கருத்துக்களையம், படங்களையும் விமர்சிப்பதை, சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனாலும் அவற்றை தமாசாகவே எடுத்துக்கொள்கிறார் கஸ்தூரி. எல்லை மீறினால் திட்டுகிறார்.

தனது ட்விட்டேர் பக்கத்தில் புதிதாக அமைச்சர் மாஃபா பாண்டிராஜனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதன் கீழ் 'எவ்வளவு நாள் தான் பழைய புகைப்படத்தை வைத்து கலாய்பீர்கள். இந்தாங்க புது அவல்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப் பார்த்த ஒருவர் அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் செல்பி எடுக்கவில்லையா என்று சுட்டி காட்டி இருந்தார். அதற்கு அவர் பொருத்திருங்கள் என்று பதில் அளித்தார்.

இன்னொருவர் ராஜுவை எப்படி அழைப்பீர்கள் என்று கேள்வி எழுப்ப 'என் டார்லிங் தெர்மாகோல் ஞானி வாழ்க" என்று பதில் கருத்து பதிவிட்டு பரபரப்பை எற்படுத்து உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!