
பிரபல நடிகை கெளதமி, நடிப்பில் மட்டுமின்றி தற்போது சமூகசேவையிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் அரசியல் குறித்து மனதில் தோன்றிய கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்தியும் வருகிறார்.
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணதில் மர்மம் இருப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாஜக, பிரபலமான ஒருவரை, குறிப்பாக திரையுலகை சேர்ந்த ஒருவரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் வேட்பாளர் பரிசீலனையில் நடிகை கெளதமி, நடிகர் விஜயகுமார், டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுமார், கங்கை அமரன் உள்பட பலர் உள்ளார்களாம்.
ஆனால் சமீபத்தில் பாஜக மேலிடத்தை சேர்ந்த ஒருவர் நடிகை கெளதமியை சந்தித்ததாகவும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா? என்று தெரியவில்லை ஒருவேலை இது உண்மை என்றால் இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும் என கூறப்படுகிறது.