காங்கிரஸ் வேட்பாளரின் பிகினி போட்டோ வைரல்.. வேற வேட்பாளரே கிடைக்கலையா உங்களுக்கு ? கலாய்க்கும் எதிர்க்கட்சிகள்

Published : Jan 16, 2022, 11:39 AM ISTUpdated : Jan 17, 2022, 11:45 AM IST
காங்கிரஸ் வேட்பாளரின் பிகினி போட்டோ வைரல்.. வேற வேட்பாளரே கிடைக்கலையா உங்களுக்கு ? கலாய்க்கும் எதிர்க்கட்சிகள்

சுருக்கம்

ஹஸ்தினாப்பூர் தொகுதியில், அர்ச்சனா கவுதம் என்ற நடிகையை வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. பிகினி உடை அணிந்து நிற்கும் இவரது படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆன பிரியங்கா வெளியிட்டார். மொத்தம் 125 பேர் கொண்ட இந்த வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ஹஸ்தினாப்பூர் தொகுதியில், அர்ச்சனா கவுதம் என்ற நடிகையை வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. 

அழகி போட்டியில் வெற்றி பெற்ற அர்ச்சனா, பிகினி உடை அணிந்து நிற்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் மிஸ் பிகினி 2018, மிஸ் உத்தர பிரதேசம் 2014 மற்றும் மிஸ் காஸ்மோ வேர்ல்ட் 2018 ஆகிய பட்டங்களை வென்றவர்.அர்ச்சான கௌதம் பெற்ற பட்டங்களை தற்போது அவரது அரசியல் வாழ்க்கைக்கு வேட்டு வைத்துள்ளது. 

சமூக ஊடகங்களில் அர்ச்சனா கவுதம் பிகினி அணிந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா கவுதம், எனது தொழிலையும், அரசியல் வாழ்க்கையையும் தொடர்பு படுத்தி பார்க்காதீங்க என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, ‘வேட்பாளர்கள் கிடைக்காமல் காங்கிரஸ் திண்டாடுகிறது. மலிவான விளம்பரங்கள் மற்றும் தலைப்பு செய்திகளுக்காக  இத்தகைய வேட்பாளரை அக்கட்சி நிறுத்துகிறது’ என்று கூறினார். இதுபற்றி பதிலடி கொடுத்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அசோக் சிங், ‘நடிகைகள் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு உள்ளது? பாஜ.விலும் நடிகைகள் பலர் இருக்கின்றனர்.

அதில் ஒருவர்  அமைச்சராகவும் உள்ளார். இதில், எங்கள் மீது குறை கூறுவது, பாஜ.வின் மோசமான மனநிலையையே காட்டுகிறது’ என்று கூறினார். அர்ச்சனா கவுதமின் பிகினி போட்டோவை எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், நெட்டிசன்களும் பரப்பி வருகின்றனர்.இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?