ஏக வருத்தம்... அண்ணாமலைக்கே குடைச்சலா..? பாஜகவில் சீனியர்கள் செய்யும் சதி..?

By Thiraviaraj RMFirst Published Jan 16, 2022, 10:52 AM IST
Highlights

மாநிலத் தலைவராக இருப்பவர் அமைப்புச் செயலாளரின் அனுமதி பெற்றுத்தான் பொறுப்பளார்களை நீக்கவோ, நியமிக்கவோ முடியும். 
 

அத்தனை சீனியர்கள் இருக்கும்போது தற்போது வந்த அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவராக்கியது சீனியர்களுக்கு கசப்பாகவே இருந்தது. அண்ணாமலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் அவர்கள் விரும்பவில்லை. அது அவ்வப்போது வெளியில் தெரிய வந்தாலும் அமைப்புச்செயலாளர் கொடுக்கும் குடைச்சல் அண்ணாமலையை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.

பாஜகவில், மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகத்துக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவுகிறதாம். பாஜகவைப் பொறுத்தவரை மாநில அமைப்புச் செயலாளர் பதவி மிகமுக்கியமானது. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தான் இந்தப் பதவிக்கான நபரை கட்சிக்கு வழங்கும். மாநிலத் தலைவராக இருப்பவர் அமைப்புச் செயலாளரின் அனுமதி பெற்றுத்தான் பொறுப்பளார்களை நீக்கவோ, நியமிக்கவோ முடியும். 

அதன்படி, அண்மையில் மாநில நிர்வாகிகள் ஒருசிலரை மாற்ற அனுமதி கேட்டு, அண்ணாமலை அனுப்பிய கோப்பை கிடப்பில் வைத்துவிட்டராம் விநாயகம். இதனால், இப்படி இருந்தால் கட்சியை எப்படி ஒழுங்குபடுத்துவது என அண்ணாமலை ஏக வருத்தத்தில் இருக்கிறாராம். இது இப்படி இருக்க, அண்மையில் நாகர்கோவிலில் சிறுபான்மையினரை பாஜகவில் இணைக்கும் விழா அண்ணாமலை தலைமையில் நடந்தது.

 உள்ளூரிலேயே இருந்தும் இந்த விழாவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் போகவில்லையாம். ‘சீனியர்கள் எல்லாம் தங்களுக்குள் பேசிவைத்துக் கொண்டு இப்படி சதி செய்கிறார்களோ’ என்று சந்தேகப்படுகிறதாம் அண்ணாமலையின் போலீஸ் மூளை.
 

click me!