நான் விரைவில் அரசியலுக்கு வருவேன்... அமலா பால் அதிரடி முடிவு!

Published : Sep 27, 2018, 02:19 PM ISTUpdated : Sep 27, 2018, 02:20 PM IST
நான் விரைவில் அரசியலுக்கு வருவேன்... அமலா பால் அதிரடி முடிவு!

சுருக்கம்

மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகரகளின் மனதில் இடம் பிடித்த நடிகை அமலாபால் , தொடர்ந்து தனுஷ், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் திரையுலகில் தன்னுடைய இடத்தினை தக்க வைத்துக்கொள்ள பெரிய அளவில் முயற்சி மேற்கொண்டார். 

மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகரகளின் மனதில் இடம் பிடித்த நடிகை அமலாபால் , தொடர்ந்து தனுஷ், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் திரையுலகில் தன்னுடைய இடத்தினை தக்க வைத்துக்கொள்ள பெரிய அளவில் முயற்சி மேற்கொண்டார். 

அது ஒரு பக்கம் கை கொடுக்காத நிலையில் பிரபல இயக்குனருடன் திருமண பந்தத்தில் இணைந்தார். அதுவும் சரிவராத நிலையில் மீண்டும் திரையுலகிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார் அமலா பால். அதன் பிறகு சில பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதிலிருந்தெல்லாம் அசால்டாக வெளிவந்த அமலாபால் , கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். 

இதனிடையே சமுதாயக்கருத்துக்கள் கூறுவது,. பிறருக்கு உதவுவது என அவ்வப்போது சோஷியல் சர்வீஸ்களிலும் தலைகாட்டி வரும் அமலா பால், ரஜினிகாந்த் பாணியில் அவ்வப்போது இமயமலைக்கு வேறு சென்று விடுகிறார். 
அவர் போகும் பாதையை பார்த்தால் அம்மணி எதுக்கோ ரூட் விடுகிறார் போல இருக்கே என அப்போதே சந்தேகப்பட ஆரம்பித்தது கோலிவுட் வட்டாரம். 

அந்த சந்தேகத்தை தற்போது உறுதிபடுத்தி இருக்கிறார் அமலா பால். தற்போது அவர் விஷ்ணுவிஷாலுடன் நடித்திருக்கும் “ராட்சசன்” திரைப்படம் வரும் அக்டோபர் 5 அன்று ரிலீசாக இருக்கிறது.

அதற்கு முன்னதாக நடைபெற்ற ராட்சசன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை அமலா பால் , பின் வருமாறு தெரிவித்திருக்கிறார். ரஜினியை போல இமயமலைக்கு செல்வது தான் எனக்கு மன அமைதியை தருகிறது. மேலும் நான் என்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்துவருகிறேன். 

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என மனம் சொன்னது. அதனால் தான் கையில் அடிபட்டிருந்த போதும் கூட நேரில் சென்று என்னால் ஆன உதவிகளை செய்தேன். எனக்கு சமூதாயம் சார்ந்த அக்கறை இருக்கிறது. அதுமட்டுமல்ல அரசியலிலும் ஆர்வம் இருக்கிறது. விரைவில் அரசியலுக்கு வருவேன் என்றும் தெரிவித்திருக்கிறார் அமலாபால்.

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!