"நீங்கமட்டும்தான் கொடுப்பீங்களா... நாங்களும் கொடுப்போமுல்ல..." தமிழ் இருக்கைக்கு 10 லட்சம் கொடுத்த நடிகர் விஷால்!

Asianet News Tamil  
Published : Oct 29, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
"நீங்கமட்டும்தான் கொடுப்பீங்களா... நாங்களும் கொடுப்போமுல்ல..." தமிழ் இருக்கைக்கு 10 லட்சம் கொடுத்த நடிகர் விஷால்!

சுருக்கம்

Actor Vishal who gave Rs 10 lakh to Tamil seat

ஹார்வட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். 

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக முயன்று வருகின்றனர்.

அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாக அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்காக பலர் நிதி கொடுத்தனர். ஆனாலும் 10 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. 

இந்த நிலையில், தமிழக அரசு 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க ஒப்புக் கொண்டது. தமிழக அரசு நிதி அளிக்க ஒப்புக் கொண்டுள்ள நிலையில், நடிகர் விஷால், 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர். 380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைய முயற்சி எடுத்து வருபவர்களுக்கு பாராட்டும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தமிழுக்கு அங்கே ஓர் இருக்கை அமைக்க சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், தனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறியுள்ளார்

உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும், மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ
வேண்டும் என்றும் நடிகர் விஷால் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?