அரசியல் கட்சி துவங்குகிறாரா தளபதி விஜய்..? வெளியானது உண்மை..!

Published : Nov 05, 2020, 05:21 PM ISTUpdated : Nov 05, 2020, 05:42 PM IST
அரசியல் கட்சி துவங்குகிறாரா தளபதி விஜய்..? வெளியானது உண்மை..!

சுருக்கம்

கடந்த சில வருடங்களாகவே, விஜய் அரசியல் நோக்கத்துடன், ஆடியோ லான்ச் விழாக்களில் பேசி வந்த நிலையில், தற்போது விஜயின் அரசியல் வருகை குறித்து ஒரு தகவல் வெளியான நிலையில் அது வதந்தி என்பதை விஜய் தரப்பை சேர்ந்தவர்கள் உறுதி படுத்தியுள்ளனர்.  

கடந்த சில வருடங்களாகவே, விஜய் அரசியல் நோக்கத்துடன், ஆடியோ லான்ச் விழாக்களில் பேசி வந்த நிலையில், தற்போது விஜயின் அரசியல் வருகை குறித்து ஒரு தகவல் வெளியான நிலையில் அது வதந்தி என்பதை விஜய் தரப்பை சேர்ந்தவர்கள் உறுதி படுத்தியுள்ளனர்.

மேலும் விஜய்யின் தந்தை  எஸ்.ஏ.சி... விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய்யின் மக்கள் இயக்கம் சரியான நேரத்தில், அரசியல் கட்சியாக மாறும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் தளபதி விஜய் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில், விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ள சம்பவம் விஜய் அரசியலில் நுழைய ஆயத்தம் ஆகிவிட்டாரா? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திடீர் என விஜய், திருச்சி தெற்கு, திருச்சி மேற்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் பெயரை தலைமை தேர்தல் ஆணையத்தில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் பதிவு செய்து விட்டதாகவும், கட்சி தலைவராக பத்மநாபன், பொது செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என ஒரு தகவல் வெளியானது. இப்படி வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என விஜய்யின் மக்கள் தொடர்பாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்