பாஜகவில் நடிகர் வடிவேலு...? பிரச்சார பீரங்கிகளை தயார் படுத்துகிறது பாஜக..!

Published : Oct 20, 2020, 07:58 AM IST
பாஜகவில் நடிகர் வடிவேலு...? பிரச்சார பீரங்கிகளை தயார் படுத்துகிறது பாஜக..!

சுருக்கம்

அனைவருக்கும் எப்பவும் பிடித்தமான காமெடி நடிகர் என்றால் அது வடிவேலு.இவரை அடித்துக்கொள்ள தமிழ் சினிமாதுறையில் ஆள் இல்லை.அந்த அளவிற்கு இவரது காமெடி அரசியல் மீம்ஸ் முதல் இறப்பு நிகழ்ச்சி ஊழல்வாதிகளை வெளுத்து வாங்கும் காமெடி காட்சிகள் அனைத்தும் வடிவேலு நடித்த காட்சிகள்.தான்.  

அனைவருக்கும் எப்பவும் பிடித்தமான காமெடி நடிகர் என்றால் அது வடிவேலு.இவரை அடித்துக்கொள்ள தமிழ் சினிமாதுறையில் ஆள் இல்லை.அந்த அளவிற்கு இவரது காமெடி அரசியல் மீம்ஸ் முதல் இறப்பு நிகழ்ச்சி ஊழல்வாதிகளை வெளுத்து வாங்கும் காமெடி காட்சிகள் அனைத்தும் வடிவேலு நடித்த காட்சிகள்.

 திமுகவிற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டார் நடிகர் வடிவேலு.அதன் பிறகு எந்த படங்களும் அவருக்கு திரைக்கு வரவில்லை.ஆனாலும் என்றுமே சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு வடிவத்தில் இடம்பெற்றுக் கொண்டே இருப்பார் வடிவேலு. அதற்கு காரணம் ரசிகர்களிடையே அவர் ஏற்படுத்திய தாக்கம் தான். தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் கச்சிதமாக நடித்து ரசிகர்களை தம்பக்கம் இழுக்க வல்லவர்.
திரைத்துறையில் சில காலமாகத் தலைகாட்டாமல் இருந்த வடிவேலு தற்போது பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பாஜகவில் ஏராளமான தமிழக நடிகர், நடிகைகள் இணைந்துள்ளன. கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கெளதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.இந்த வரிசையில் நடிகர் வடிவேலு இணைய போவதாக தகவல்கள் உலாவிக்கொண்டிருக்கிறது. இதற்கு வடிவேலு இன்னும் வாய் திறக்கவில்லை.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி