ஆரம்பமே அமர்க்களம் தான்.. கமல் பட நடிகை ஊர்மிளா சிவசேனா கட்சியில் இணைந்தார்.. காத்திருக்கும் முக்கிய பதவி..!

By vinoth kumarFirst Published Dec 1, 2020, 2:21 PM IST
Highlights

பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்தார். 

பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்தார். 

 கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகை ஊர்மிளா மதோன்கர், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றுவிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி வெற்றி பெற்று எம்.பி.யாகிவிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடிகை ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்தார். மும்பை காங்கிரஸ் தலைவர்கள் இடையே நிலவும் கருத்து மோதல்கள் காரணமாகவே அவர் அந்த கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

 இதன் இடையே மகாராஷ்டிரா சட்டமேலைவையில் காலியாக இருக்கும் 12 நியமன உறுப்பினர்கள் பதவிக்கு புதிதாக 12 பேரை மாநில அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நியமிக்கவிருக்கிறார். இந்த பதவிகளுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா சார்பில் தலா 4 பேரது பெயர்கள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் தரப்பட்டுள்ளது.

 சிவசேனா சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் நடிகை ஊர்மிளா  மதோன்கர் ஆவார். இந்நிலையில், தான், நடிகை ஊர்மிளா இன்று முதல்வர் உத்தவ் தாக்கரேயின் முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

click me!