நடிகர் சூர்யாவை மிரட்டினாரா அமைச்சர் ? நமக்கேன் வம்பு என ஒதுங்க நினைக்கும் சிவகுமார் குடும்பம் !!

By Selvanayagam PFirst Published Jul 16, 2019, 10:13 PM IST
Highlights

புதிய கல்விக் கொள்கை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் சூர்யாவை அமைச்சர் ஒருவரின் உதவியாளர் போனில் மிரட்டியதாகவும், இதனால் வம்பு, வழக்குகளுக்கு பயந்து அவரது குடும்பத்தினர் ஒதுங்க நினைப்பதாகவும், அதனால் தான் இவ்வளவு விமர்சனங்களுக்கும் பதில் அளிக்காமல் அவர் அமைதி காப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் புதிய கல்விக் கொள்கை  குறித்து நடிகர் சூர்யா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு  சூர்யா வன்முறையைத் தூண்டுகிறார் என்று பாஜகவின் ஹெச்.ராஜா கடுமை காட்டினார். பாஜக தலைவர்  தமிழிசை புதிய கல்விக் கொள்கையை பற்றி தெரியாதவர்களெல்லாம் பேசுகிறார்கள் என்றார். அமைச்சர் கடம்பூர் . ராஜூ, ‘சூர்யாவின் பேச்சு  அரைவேக்காட்டுத் தனமாக இருப்பதாக பேசினார்.

அதே நேரத்தில் நடிகர் சூர்யாவுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து  சூர்யா தர்பபில் இருந்து பதில் ஏதும் வரவில்லை. ஊடகங்களுக்கும் அவர் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை.

இந்நிலையில்தான் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் அலுவலகத்தில் இருந்து சூர்யாவைத் போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது ‘என்ன சார்... சூர்யா அரசாங்கத்தை எதிர்க்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாரா? அப்படின்னா சொல்லுங்க அரசாங்கத்தால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிக்கிறோம் என கோபப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள் உங்க அகரம் ஃபவுண்டேஷன் ஏராளமான அரசுப்பள்ளிகள்ல பல நிகழ்ச்சிகள், உதவிகள் செஞ்சுக்கிட்டு வருது. அதை உடனே நிறுத்தச் சொல்லிடறீங்களா? கல்வித் துறை சார்பா இனி அகரம் ஃபவுண்டேஷனுக்கு எந்த ஒத்துழைப்பும் தேவையில்லைனு சூர்யாவை அறிவிக்கச் சொல்லுங்க. அப்புறமா அரசாங்கத்தை விமர்சிக்க சொல்லுங்க என மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா, இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாரானார். ஆனால் அமைச்சர் விடுத்த  எச்சரிக்கையைத் தொடர்ந்து சூர்யா வேறு மாதிரி சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். இது தொடர்பாக அப்பா சிவகுமாரிடமும் ஆலோசித்திருக்கிறார்.

‘இன்னிக்கு நாம பதில் கொடுக்கறதால மீடியாவுக்கு தீனி போடலாம். ஆனா அரசாங்கம் என்னை எதிர்க்கிறதா நினைச்சு, அரசுப் பள்ளிகள்ல அகரம் ஃபவுண்டேஷன் செயல்பட தடை போட்டுட்டாங்கன்னா, இப்போ பலன் பெறும் பிள்ளைங்கதான் பாதிக்கப்படுவாங்க. அதனால் பதிலுக்கு பதில் கொடுக்குறதுல்லாம் இப்போதைக்கு வேணாம். இத்தோடு நிறுத்திக்குவோம் என சூர்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!