
தொகுதிக்குள்ள பாதுகாப்பு இல்ல…உள்ள போன விரட்டுராய்ங்க…தேர்தலில் நின்னு தெரிந்தோ, தெரியாமலோ ஜெயிச்சுட்டேன்…இப்ப ஏன்டா ஜெயிச்சோம்னு இருக்கு என கருணாஸ் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் புலம்பித் தள்ளியுள்ளார்.
திருவாடானைத் தொகுதியில் குடிநீர் திட்டம் செயல்படுத்துவது குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் நடராஜனை , தொகுதி எம்எல்ஏ கருணாஸ் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்நது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த ஒரு பிரச்சனையிலும் அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை, தொகுதிக்கு எதுவும் செய்யமுடியவில்லை என புலம்பிய அவர், இதனால் தொகுதிக்குள் போக முடியவில்லை என்றார்.
அப்படியானால் உங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யலாமே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், எந்தப் பணியிம் செய்ய முடியாமல் அந்த பதவி எதுக்கு என சட்டப் போரவையில்கூட பேசி விட்டேன், தெரிந்தோ, தெரியாமலோ ஜெயித்து விட்டேன், இப்ப ஏன்டா ஜெயிச்சோம்னு இருக்கு என புலம்பினார்.
தொகுதிக்குள் எனக்கு பாதுகாப்பே இல்லை, உள்ளே வந்தால் 4 பேரை நிறுத்தி இவர்களே கல் எறிகிறார்கள், யார் என்று கேட்டால் அவர்கள் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என கூறுகிறார்கள். இதற்கொல்லாம் காரணம் அமைச்சர் மணிகண்டன்தான் எனவும் கருணாஸ் தெரிவித்தார்.
இவரால்தான் தான் தொகுதிப் பக்கமே வர முடியவில்லை எனவும் கருணால்ஸ் நிருபர்களிடம் புலம்பித் தள்ளினார்.