30 லட்சம் ரூபாய் ஏமாந்த பேராசிரியை நிர்மலா தேவி…. யாரிடம். எதற்கு தெரியுமா ?

First Published Apr 24, 2018, 12:06 PM IST
Highlights
30 lakhs given to somebody by Nirmala devi for medical seat


பேராசிரியை நிர்மலா தேவி தனது மகளுக்கு மெடிக்கல் காலேஜ் சீட் வாங்குவதற்காக ஒருவரிடம் 30 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்து விட்டதாகவும், விட்ட பணத்தை திரும்பப் பிடிக்கவே இந்த கேலையில் இறங்கியதாகவும் சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்தார்.

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வலியுறுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணிதப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது அவரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று 5 ஆவது நாளாக அவரிடம் கிடுக்கிப் பிடி விசாரணை நடைபெறு வருகிறது. இன்றுடன் அவரது போலீஸ் காவல் முடிவடைவதால் அவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

இந்நிலையில் விசாரணையின்போது நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் குறித்து தகவல்கள் வெளி வரத் தொடங்கியுள்ளன.

விசாரணை தொடங்கியதில் இருந்தே நிர்மலா எந்த பதற்றமோ பயமே இல்லாமல் இருந்துள்ளார். பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் தனது குடும்பம் தொடர்பாக கேள்விகளுக்கு மட்டும் மௌனமாக இருந்துள்ளார்.

எதற்காக இப்படி செய்தீர்கள் ?  என கேட்ட போது, பணத்திற்காகத்தான் என பளிச் என்று பதில் தெரிவித்துள்ளார். உங்களுக்கு பணத் தேவை இருந்துச்சுன்னா அதற்காக மாணவிகளை  இதில் இறக்கி விடுவது பாவம் இல்லையா என்றும் போலீசார் கேள்வி எழுப்பினர்.

அப்பொழுது மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தன்னை இதற்கு தூண்டியதாகவும், அதனால் தான் இப்படி நடந்து பொண்டதாகவும் நிர்மலா தெரிவித்தார்.

மேலும் தனது மகளுக்கு மெடிக்கல் சீட் வாங்குவதற்காக ஒருவரிடம் 30 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துவிட்டதாகவும், விட்ட அந்த பணத்தை பிடிக்கவே இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியதாகவும் நிர்மலா தெரிவித்துள்ளார்,

click me!