எல்லாம் முடிஞ்ச பிறகுதான் கேட்பீங்களா? எடப்பாடிக்கு டோஸ் விட்ட கமல்!

 
Published : Jan 24, 2018, 12:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
எல்லாம் முடிஞ்ச பிறகுதான் கேட்பீங்களா? எடப்பாடிக்கு டோஸ் விட்ட கமல்!

சுருக்கம்

Actor Kamal Hassan Twitt

ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் பேருந்து கட்டண உயர்வை தடுக்க ஆவனம் செய்திருக்கும். ஆனால் முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம் என்று நடிகர் கமல் டுவிட்டரில் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் 70 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதேபோல், மாணவ-மாணவிகளும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவ - மாணவிகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதனால், தமிழகம் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. 

பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறிய நடுநிலையாளர்களுமே, தமிழக அரசு உயர்த்தியுள்ள இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பேருந்து கட்டண உயர்வு குறித்து, நடிகர் கமல் ஹாசன், தனடு டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் ஆகியோர் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கூறிய பிறகும், பேருந்து கட்டணம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், கமல், டுவிட்டரில் பேருந்து உயர்வு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

அதில், பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசு பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே! என்று பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!