உங்க மொழி படம் மட்டுமல்ல முதல்வரையும் பிடிக்கும் கொல்கத்தாவில் உற்சாகமாக பேசிய கமல்!

Asianet News Tamil  
Published : Nov 10, 2017, 06:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
உங்க மொழி படம் மட்டுமல்ல முதல்வரையும் பிடிக்கும் கொல்கத்தாவில் உற்சாகமாக பேசிய கமல்!

சுருக்கம்

Actor Kamal Hasan interview in Calcutta

மேற்கு வங்க திரைப்படங்கள் மட்டுமல்ல உங்கள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும் மிகவும் பிடிக்கும் என்று நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமலஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது தீவிரமாக அரசியலில் குதித்துள்ள கமல். வேறு மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து வருகிறார். மற்ற மாநில முதலமைச்சர்களுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாகவும், அதே  சமயத்தில் தன்னுடைய  அரசியல் வாழ்கைக்கு வழியாக அமையும் என அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் இன்று மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜியை சந்திக்க கொல்கத்தா சென்றடைந்தார்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் 23-வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. வரும் 17 ஆம் தேதி வரை திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல் ஹாசன், மேற்கு வங்கம் சென்றார். விமான நிலையம் சென்ற நடிகர் கமல் ஹாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்க திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். அவற்றை நான் விரும்பி பார்ப்பேன் என்றும் கூறினார்.

அதேபோல், கொல்கத்தா எனக்கு மிகவும் பிடித்த நகரம் என்று கூறிய கமல், உங்கள் மாநில படங்கள் மட்டுமல்ல முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும் மிகவும் பிடிக்கும் என்றார். இங்கு நான் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளேன் என்றும், இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும் கமல் ஹாசன் கூறினார்.

நடிகர் கமல் ஹாசன் முன்னதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

அடித்து ஆடும் விஜய்..! பெண்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம்..! ஸ்கோர் செய்த தளபதி
சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!